காலத்திற்கு ஏற்ப மாறுபட்டது டாட்டூ:
முன்னெல்லாம் நாம் பச்சை குத்தவேண்டும் என்றால் நரிக்குறவன், குறத்தியைத்தான் நாடி செல்வோம். அப்படி போனாலும் காரை முல்லை வைத்துத்தான் பச்சை குத்துவாங்க. அப்படி குத்தும்போது ரொம்பவலிக்கும் வலியின் காரணமாக நமக்கு காய்ச்சல் கூட வரும். அந்த வலியையும் தாங்கிக்கொண்டு சிலபேர் பச்சை குத்திக்கொள்வார்கள்.
அதுக்கப்பறம் ஊசியில் மை வைத்து பச்சை குத்தினாங்க.
இப்போ மெஷின் முறையில் பச்சை குத்தி விடறாங்க. இந்த காலத்தவர்களுக்கு சொல்லவே வேண்டாம் உடல் முழுக்க டாட்டூவை விதவிதமாக குத்தி வருகின்றனர். அதுவும் கணினி உதவியால் எளிதாகவும், வலியில்லாமல் டாட்டு குத்துறாங்க.
இவற்றிலும் ஒரு படி மேல் சென்று உடல் நலத்தைக்கூட டாட்டூவால் தெரிஞ்சிக்க முடியும். நீங்கள் படிப்பது உண்மைதான்.
உடல் நலத்தை பாதுகாக்கும் டாட்டூ:
விஞ்ஞானிகள் உடல் நலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த எலக்ட்ரானிக் டாட்டூவை உருவாக்கியுள்ளனர். கேட்பதற்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கும்.
சீனா பல்கலைக்கழகத்து விஞ்ஞானி:
இந்த டாட்டூவை சீனா சிங்குவா பல்கலைகழக விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு தான். கையில் சிறியதாக இருக்கும் இதை ஒட்டிக்கிலாம். அப்படி ஒட்டிக்கிட்டா உடல் இருக்கற தோலை போலவே காட்சியளிக்கும். இதுல இருக்கற எலக்ட்ரானிக் கருவிகள் உடல் நிலை குறித்து அப்போது தெரிவித்துவிடும்.
டாட்டூ மூலம் உடல் நிலையை தெரிந்து கொள்ளலாம்:
இந்த எலக்ட்ரானிக் டாட்டூவனது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தையும், உடலில் உள்ள வெப்ப தன்மையையும் கணித்து சொல்லிவிடும்.
இந்த டாட்டூவை முகத்திலும், தொண்டையிலும் இணைத்து கொள்ளலாம், இதன் மூலம் சுவாசம், இதயத்துடிப்பு மற்றும் குரல் ஆகியவற்றையும் கண்காணிக்கலாம்.
லேசர் தொழில் நுட்பம்:
இந்த கண்டுபிடிப்பு லேசர் தொழில்நுட்பம் மூலம் கிராபைன் அடிப்படையில் எலக்ட்ரானிக் ஸ்கின்னை வசதிக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
இந்த கண்டுபிடிப்பு சுகாதாரம், அறிவுத்திறன் நிறைந்த சாதனப் பயன்பாட்டிற்கு பெரும் உதவிகரமாக இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்கராங்கோ.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.