5G Technology Information in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 5G தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். நாடு முழுவதும் அதிகமாக பேசப்படுவது இந்த 5G தெழில்நுட்பம் தான். 5G என்பது புதிய தொழில்நுட்பம் கிடையாது. தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் 4G நெட்வொர்கின் வசதிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தொழில்நுட்பம் தான் 5G. இந்த 5G தொழில்நுட்பத்தின் தரத்தை சர்வதேச தகவல்தொடர்பு யூனியன் என்று சொல்ல கூடிய ITU நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், இது வரை இந்தியா கண்டிராத மாற்றத்தை 5G தொழில்நுட்பம் ஏற்படுத்த போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், 4G நெட்வொர்கின் திறனை விட 5G தொழில்நுட்பத்தின் திறன் 1000 மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த 5G தொழில்நுட்பத்தால் நமக்கு என்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
லெனவோ நிறுவனம் உலகிலேயே முதன் முதலாக 5G Laptop அறிமுகம் செய்ய உள்ளது..! |
5ஜி நெட்வொர்க் நன்மைகள்:
பல மடங்கு திறன் கொண்டது 5G:
5G நெட்வொர்க்கின் திறன் 1000 மடங்கு அதிகமான வேகத்தை கொண்டிருக்கும். 5G நெட்வொர்க் 8.3 மில்லியன் மடங்கு அதிகமான வேகத்தை கொண்டிருக்கும். மேலும், 5G நெட்வொர்க்கின் டேட்டா வேகம் 20GB/s ஆக இருக்கும்.
1 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1 மில்லியன் டிவைஸ்களுடன் 5G தொழில்நுட்பத்தால் இணைய முடியும். 4G யை விட 20 மடங்கு 5G அதிகமாக டவுன்லோட் செய்யும் திறனை கொண்டுள்ளது.
5G நெட்வொர்க்கின் டவுன்லோட் வேகம் 87.5 MB/s ஆக இருக்கும். அதாவது 3 GB இருக்கும் ஒரு முழு படத்தை வெறும் 35 நொடிகளில் 5G நெட்வொர்க்கின் மூலம் உங்களால் அதிவேகமாக டவுன்லோட் செய்ய முடியும்.
5G -யின் தானியங்கி கார்கள்:
இந்த 5G நெட்வொர்க்கின் திறனை கொண்டு நம்மால் தானியங்கி கார்கள் பயன்படுத்த முடியும். இந்த 5G நெட்வொர்க் சேவையை வைத்து தானியங்கி கார்கள் மற்றும் டெலி-சர்ஜெரி போன்றவற்றை செயல்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அதுபோல பல நிறுவனங்கள் தானியங்கி கார்களை வடிவமைத்து கொண்டு வருகின்றன. அந்த கார்கள் சரியாக செயல்படுவதற்கு அதிகமான இணைய சேவை தேவைப்படுகிறது. அந்த தானியங்கி கார்கள் செயல்படுவதற்கான இணைய சேவையை 5G தொழில்நுட்பத்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் வரவிருக்கும் Jio 5G Phone.. விலை எவ்வளவு? |
5G -யின் தொலைதூர அறுவை சிகிச்சை:
5G தொழில்நுட்பத்தின் சேவையை பயன்படுத்தி மருத்துவர்கள் Virtual முறையில் அறுவை சிகிச்சை பயிற்சிகளை செய்ய முடியும்.
மருத்துவ துறையில் சில சோதனைகளை செய்ய துல்லியமான மற்றும் வேகமான தொழில்நுட்பமாக இது இருக்கும்.
இந்த 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இனி வரப்போகும் காலகட்டத்தில் நோயாளியின் அரையில் மருத்துவர் இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்ற முடியும்.
5G -யின் ஸ்மார்ட் ஹோம்:
இந்த 5G தொழில்நுட்பத்தின் மூலம் நம் வீட்டின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். மேலும், கூகுள் ஹோம் , அமேசான் எக்கோ போன்ற கருவிகள் சிறப்பாக செயல்படுவதற்கு 5G தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.
Responsive வேகம் 5G தொழில்நுட்பத்தில் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற கருவியல் செயல்படுவதற்கு 5G உதவுகிறது.
இன்னும் ஏராளமான சேவைகளை 5G தொழில்நுட்பம் வழங்குகிறது. இந்த 5G தொழில்நுட்பத்தால் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது. மேலும், இந்த 5G தொழில்நுட்பம் இந்திய குடிமக்களின் வாழ்க்கைமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்று கூறலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |