அமேசானில் டெபிட் கார்டு இஎம்ஐ அறிமுகம் !!!

Amazon

இ-காமர்ஸ் துறையில் இந்தியா வின் இரண்டாவது பெரிய நிறுவனமான அமேசான் இந்தியா டெபிட் கார்டு EMI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அட ஆமாங்க! அமேசான் நிறுவனம் Amazon Pay மூலம் எதாவது பொருட்கள் வாங்குவதற்கு 3 முதல் 12 மாதங்கள் வரையிலான ஒரு இடைவெளியில் 60,000 ரூபாய்க்கு ஒரு EMI ஐ வழங்குகிறது. இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்கும் பயன்படும் வகையில்தான் இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி பெற credit card தேவையில்லை. ஆனால் EMI ஐ பெறுவதற்கு அடையாள அட்டை எண் (Aadhaar number, PAN number) தேவை.

இந்த வசதியை mobile app மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

60 வினாடிகளுக்குள், இந்த வசதியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற முடியும் என்பது e-காமர்ஸின் மாபெரும் அறிவிப்பு ஆகும்.

இந்த வசதியை குறிப்பாக, 8000 ரூபாய் கொண்ட பொருளை வாங்கினால் மட்டுமே டெபிட் கார்டு இஎம்ஐ வசதி அளிக்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

இந்த வசதியை பெற:

  • வசதியை பெற வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ஐடி பயன்படுத்த ஆதார், பான், அட்டை வங்கி கணக்கு தேவை.
  • எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கனரா, சிட்டி, கொடக் மகேந்திர ஆகிய வங்கிகளின் டெபிட் கார்டு பயன்பாட்டாளர்கள் இந்த வசதியை பெற்றுள்ளனர்.

Amazon Pay EMI வசதியை பதிவு செய்யும் முறை:

  • முதலில் தங்களது மொபையில் Amazon app ஓப்பன் செய்ய வேண்டும்.
  • பின்பு அவற்றில் Amazon Pay EMI பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு அவற்றில் Aadhaar, PAN Card விவரங்களை தரவேண்டும்.
  • ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTP ஐ சரிபார்க்கவும்.
  • இப்பொது நீங்கள் amazon pay emi பயன்படுத்துவதற்கான அறிவிப்பை காணமுடியும்.
  • பின்பு அவற்றில் குறிப்பிட்டுள்ள வங்கியில் எந்த வங்கியில் உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் விவரங்களை சரிபார்க்க 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பின்பு இந்த தொகை உங்களுக்கு 3-5 நாட்களில் திருப்பி அளிக்கப்படும்.
  • மேலும், இந்த வசதி தற்போது மொபைல் போன் ஆப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. கிப்டு கார்டு, எக்ஸ்சேஞ்ச், ஜொள்ளரிஸ் ஆகியவற்றை டெபிட் கார்டு இஎம்ஐயில் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE