Best Tips For Instagram
பொதுவாக இன்றைய காலத்தை பொறுத்தவரை கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும் தனக்கு அதில் எல்லாம் தெரியும் என்று ஒரு நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மொபைல் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட சிலருக்கு தெரிவதில்லை. மொபைலில் நாம் எல்லா விஷயங்களை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்னை தெரிந்துக்கொள்வது சாதாரணமான ஒன்று. ஆகையால் இன்று பலரும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான Instagram-ல் உள்ள ஒரு ட்ரிக்ஸ்னை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன ட்ரிக்ஸ் அது எதற்காக பயன்படுகிறது மற்றும் எப்படி அதனை On செய்வது என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
குறிப்பு: இதில் Google Authenticator என்ற ஆப்பை நீங்கள் Download செய்ய வேண்டும். அத்தகைய ஆப்பை உங்களுக்கு விருப்பம் என்றால் மட்டுமே நீங்கள் Download செய்து கொள்ளலாம்.
Safety Instagram Tricks in Tamil:
Step- 1
முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓபன் செய்தில் அதில் இருக்கும் Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step- 2
இப்போது படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Security என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step- 3
அடுத்து Two-factor authentication என்பதை கிளிக் செய்து கொண்டு பின்பு Text message என்பதை On செய்து கொள்ளுங்கள்.
Step- 4
படத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல Authentication app(recommended) மற்றும் Whatsapp என்ற உள்ள இரண்டு Option-யும் On செய்து விடுங்கள்.
Step- 5
மேலே சொல்லப்பட்டுள்ளதை நீங்கள் On செய்த உடன் உங்களுக்கு Google Authenticator என்ற ஆப்பில் ஒரு OTP வரும் அந்த OTP-ஐ இதில் போட்டு Ok என்று கொடுத்தால் மட்டுமே உங்களுடைய இன்ஸ்டாகிராம் Id ஓபன் ஆகும்.
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுடைய இன்ஸ்டகிராம் Id-ஐ வேறு யாரும் தெரியாத நபர்கள் தவறுதலாக பயன்படுத்த முடியாது.
உங்க போன்ல Google Chrome இருக்கு ஆனா இதுல இருக்க ட்ரிக்ஸ் தெரியலன எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |