கீபோர்டு ஷார்ட்கட் டிப்ஸ்..! Computer Shortcut keys in Tamil..!
Computer Shortcut Keys: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம் -ன் அன்பான வணக்கம்..! கம்ப்யூட்டர் எனும் மென்பொருளானது இன்று உலகம் முழுவதையும் இயக்கி கொண்டிருக்கும் கருவியாக மாறிவிட்டது. ஏனென்றால் கம்ப்யூட்டரின் பயன்பாடானது எல்லா வேலைகளிலும் அதிகரித்துவிட்டது. சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் கணினி பயன்படுத்துவது அதிகம் ஆகிவிட்டது. நாம் அனைவரும் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தும்பொழுது மவுஸை வைத்தே பயன்படுத்தி பழகிவிட்டது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டரில் கீபோர்டு மூலம் வேலையை சுலபமாக முடிக்கலாம். இதற்கு நீங்கள் கீபோர்டின் ஷாட்கட் கீஸ்களை (keyboard shortcuts keys) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவானது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி வாங்க நண்பர்களே இப்போது கம்ப்யூட்டரில் இருக்கும் சில கீபோர்டு ஷாட்கட்ஸ்களை தெரிந்துக்கொள்ளுவோம்..!
CTRL Shortcuts On Keyboard:
CTRL Shortcuts On Keyboard Ctrl +N புதிய Window-வை ஓபன் செய்வதற்கு Ctrl +N பட்டனை அழுத்தவும். Ctrl +A அனைத்தையும் செலக்ட் செய்வதற்கு Ctrl +A பட்டனை ப்ரெஸ் செய்யவும். Ctrl +B நீங்கள் டைப் செய்துள்ள Text-ஐ Bold-ஆக மாற்ற Ctrl +B -ஐ ப்ரெஸ் செய்யவும். Ctrl +I நீங்கள் டைப் செய்து செலக்ட் செய்தவற்றை இத்தாலிக் (Italic) ஸ்டைலில் மாற்ற Ctrl +I சேர்த்து க்ளிக் செய்யவும். Ctrl +U நீங்கள் செலக்ட் செய்துள்ள Text-ற்கு கீழ் அடிக்கோடிட (Underline) செய்வதற்கு Ctrl +U பட்டனை அழுத்தவும். Ctrl +F ஒரு வார்த்தையை தேட Ctrl +F கொடுத்தால் Find என்பது ஓபன் ஆகும். அதில் அந்த வார்த்தையை கொடுத்து தேடி கொள்ளலாம். Ctrl +S நீங்கள் இப்போது பயன்படுத்துகிற ஃபைலை (File)-ஐ சேமித்து வைக்க Ctrl +S (Save) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். Ctrl +X ஒரு File-ஐ ஒரு இடத்திலிருந்து Cut செய்து வேறு இடத்திற்கு Paste செய்ய பயன்படும். (Cut செய்த இடத்தில் File முழுமையாக நீங்கிவிடும்) Ctrl +C ஒரு File-ஐ வேறொரு Copy எடுப்பதற்கு பயன்படும் Ctrl +Ins ஒரு வார்த்தை-ஐ ஒரு இடத்தில் இருந்து Copy செய்து வேறு ஒரு இடத்தில் Paste செய்ய பயன்படும் (Word, Excel, Power point etc) Ctrl +V நீங்கள் Copy எடுத்த File-ஐ Paste செய்ய இந்த Ctrl +V ஆப்ஷனை பயன்படுத்தவும் Ctrl +Y பிந்தைய Action க்கு செல்வதற்கு Ctrl +Y (Redo) பட்டனை க்ளிக் செய்யவும். Ctrl +Z டைப் செய்ததை Delete செய்த பிறகு திரும்ப வேண்டுமென்றால் Ctrl +Z ஆப்ஷனை க்ளிக் செய்யவும். (முந்தைய Action-க்கு செல்ல) Ctrl +P தற்போது இருக்கும் பக்கத்தினை பிரிண்ட் (Print) எடுப்பதற்கு Ctrl +P என்பதை க்ளிக் செய்யவும். Ctrl +K நீங்கள் டைப் செய்துள்ள வார்த்தையை செலக்ட் செய்து Hyperlink -ஐ வைத்திட Ctrl +K என்பதை ப்ரெஸ் செய்யவும்.
ALT Shortcut Keys:
பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க:
ALT Shortcut Keys In Keyboard Alt + F தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கின்ற Application-னில் File (Menu)-ஐ திறப்பதற்கு Alt + F பட்டனை க்ளிக் செய்தால் போதும். Alt + E தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கின்ற அப்ளிகேஷனின் Edit ஆப்ஷனை ஓபன் செய்வதற்கு Alt + E பட்டனை பிரஸ் செய்யவும். Alt +Tab ஒரு Application-ல் இருந்து வேறு Application-ற்கு மாறுவதற்கு Alt +Tab-ஐ க்ளிக் செய்யவும். Alt+F4 ஓபன் செய்து வைத்திருக்கும் Application-ஐ மூடுவதற்கு (Close) Alt+F4 பட்டனை ப்ரெஸ் செய்தால் போதும்.
F Keys On Keyboard:
Function (F) keys on keyboard shortcuts F1 “Help” ஆப்ஷனை ஓபன் செய்ய வேண்டும் என்றால் F1-ஐ பிரஸ் செய்யலாம். F2 செலக்ட் செய்த File-ன் பெயரை மாற்றம் (Rename) செய்ய F2 பட்டனை க்ளிக் செய்யலாம்.
Shift Delete Keyboard Shortcut:
Shift Delete Keyboard Shortcut Shift +Del ஒரு File-ஐ ஒரு இடத்தில் இருந்து நீக்கம் செய்வதற்கு Shift +Del ஆப்ஷனை க்ளிக் செய்யவும். Shift +Ins Copy அல்லது cut செய்த file ஐ Paste செய்வதற்கு இந்த Shift +Ins பட்டனை அழுத்தலாம்.
Shortcuts For Windows Key On Keyboard:
Windows Key On Keyboard Shortcuts Windows Key + E நேரடியாக File Manager-ஐ ஓபன் செய்வதற்கு Windows Key + E பட்டனை ப்ரெஸ் செய்யவும். Windows Key + L உங்களுடைய கம்ப்யூட்டரை முழுமையாக மூடுவதற்கு Windows Key + L என்ற ஷாட்கட் கீயினை அழுத்தவும்.
மேலும் இது போன்ற கீபோர்டு ஷாட்கட்ஸ்களை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil