Deleted Phone Numbers Recovery in Tamil
இனிமையான நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. நாம் நம்முடைய போனில் சில முக்கியமான போன் நம்பர்களை Save செய்து வைத்திருப்போம். அதுபோல சில நேரங்களில் அந்த போன் Numbers தானாகவே Delete ஆகியிருக்கும். அதை எப்படி திரும்ப எடுப்பது என்று சிலர் குழப்பமாக இருப்பீர்கள். அப்படி குழம்புபவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் மூலம் Delete ஆன Phone Number -யை திரும்ப எடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்க போன் Storage எப்பவும் Full ஆவே இருக்கா..? அப்போ இந்த Tricks Follow பண்ணுங்க..! |
Recover Deleted Contact Number in Tamil:
முதலில் உங்களுடைய போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Accounts என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Auto Sync Data என்ற ஆப்சன் இருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்ய வேண்டும்.
இதுபோல Auto Sync Data என்ற ஆப்ஷனை ON செய்வதன் மூலம் உங்கள் போனில் தெரியாமலோ அல்லது தானாகவோ Delete ஆகும் Contacts எல்லாம் ஒரு File -ல் Save செய்யப்பட்டிருக்கும்.அதிலிருந்து நாம் Delete ஆன போன் நம்பரை எடுத்து கொள்ள முடியும்.
உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..! |
Deleted Contacts Number Save Files in Tamil:
அடுத்து நீங்கள் உங்களுடைய Google Chrome ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Google என்று Type செய்து கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் உள்ளே சென்றதும் அதன் மேல் 6 புள்ளிகள் போன்ற கட்ட வடிவ ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Contacts என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் ஒரு திரை தோன்றும். அதன் மேல் Settings போன்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
பின் அங்கே 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Undo Changes என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Custom என்பதை தேர்ந்தெடுத்து Undo என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய போனில் இதுவரை Delete ஆன போன் Numbers எல்லாம் வந்துவிடும். அதை நீங்கள் Save செய்து கொள்ளலாம்.
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |