உங்களுடைய புகைப்படத்தில் இருக்கும் பேக்ரவுண்ட்டை Remove செய்வதற்கு இனிமேல் எந்தவிதமான ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

Advertisement

Photos Background Remover inTamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். அதாவது இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம், Facebook போன்ற வலைத்தளங்களில் உங்களுடைய புகைப்படத்தை போஸ்ட் செய்து வருவீர்கள். உங்களுடைய புகைப்படத்தை மட்டும் Background இல்லாமல் Edit செய்து இனிமேல் போஸ்ட் போடலாம்.   இதற்காக நீங்கள் இனிமேல் எந்த விதமான ஆப்களும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. மேலும் அவற்றை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

 

உங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி?

Easy Way to Remove Background From Image in Tamil:

பொதுவாக நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில்  உங்களுக்கு பின்புறத்தில் இருக்கும் இடம் பிடிக்காமல் இருக்கும், ஆனால் அந்த புகைப்படம் உங்களுக்கு பிடித்தாக இருக்கும். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் play store போன்ற ஆப்களின் மூலம் Remove Background ஆப்கள் பதிவிறக்கம் செய்வீர்கள்,  ஆனால் அதில் உங்களுடைய பாதி புகைப்படமே போய்விடும். எனவே இனிமேல் உங்களுடைய புகைப்படத்தை மட்டும் தனியாக எப்படி கட் செய்து எடுப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஸ்டேப்: 1

 photos background remover in tamil

முதலில் உங்களுடைய மொபைலை எடுத்து Google chrome- க்கு செல்லவும். அதில்  சர்ச் செய்யும் இடத்தில் Remove.bg என்று type செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 2 

 photos background remover in tamil

Remove.bg என்று type  செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும்.  அதில் Upload Image  என்று இருக்கும். Upload Image கிளிக் செய்ததும் உங்களுடைய Gallery photo -க்கு சென்றுவிடும். அதில் உங்களுக்கு எந்த புகைப்படத்தில் பின்புறத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் ஒன்றை டிக் செய்து Done  என்று கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

 photos background remover in tamil

Done என்று கொடுத்ததும் உங்களுடைய புகைப்படத்தில் இருக்கும் பின்புறத்தை அதுவே தானாக Remove  செய்து கொடுத்து விடும். Remove செய்ததும் உங்களிடம் Download என்று ஆப்சன் கேட்கும், நீங்கள் அதை Download செய்ததும் உங்களுடைய Gallery photo இருக்கும் இடத்தில் Download ஆகிவிடும்.

ஸ்டேப்:4

 photos background remover in tamil

 

இந்த பதிவிறக்கம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நினைத்தால், நீங்கள் இதை அதிகமாக பயன்படுத்துவீர்கள் என்றால். உங்களுடைய மொபைல் போனில் Google Chrome Browser-யை ஓபன் செய்து Remove.bg என்ற இணைய தளத்தை type செய்யவும் அல்லது கூகுளில் Remove.bg என்று சர்ச் (Google Search) செய்து அந்த இணையதளத்திற்கு செல்லவும். அப்பொழுது Browser Tab பக்கத்தில் இருக்கும் settings options-யை கிளிக் செய்யவும். அதில் Add to Home Screen என்று இருக்கும். Add to Home Screen என்று கிளிக் செய்ததும்  அதில் Add என்று கேட்கும் அதை கிளிக் செய்ததும் , உங்களுடைய  மற்ற ஆப்கள் இருப்பது போல்  உங்களுடைய மொபைலில் அதுவும் Add ஆகிவிடும்.

மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய மொபைலில் நீங்களும் இதை செய்து பாருங்கள்.

சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement