Google Assistant in Tamil
இன்றைய நிலையில் அனைவருமே Smart Phone பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. நாம் பயன்படுத்தும் போனில் பல ஆப்கள் இருக்கின்றன. அதில் சில ஆப்கள் Google சம்மந்தப்பட்ட Google Chrome, Google Map, Google Drive போன்ற ஆப்களாக இருக்கும். அதை நாம் கவனித்திருப்போம். அதுபோல அனைவரின் போனிலும் Google Assistant என்ற ஆப் இருக்கும். Google Assistant -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவை படித்து அந்த Tricks பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Google Assistant Settings in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்கள் போனில் இருக்கும் Google ஆப்க்குள் செல்ல வேண்டும். பிறகு அதன் மேலே இருக்கும் உங்கள் Profile மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Google Assistant என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
பிறகு அதன் கீழே நகர்த்தி சென்றால் Hey Google என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து ON செய்ய வேண்டும்.
உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..! |
ஸ்டேப் -4
பின் புதிதாக ஒரு திரை தோன்றும். அதில் கீழே Next என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து I Agree என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் போன் திரையில் கேட்கும் கேள்விகளை படித்து காட்டுங்கள். பின் உங்களுடைய Voice செட் ஆகிவிடும்.
ஸ்டேப் -5
இப்படி செய்வதால் நீங்கள் உங்கள் போனை வார்த்தையால் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் போனில் முதலில் Hey Google என்று சொல்லுங்கள். பின் Open Camera என்று சொல்லுங்கள். கேமரா ஓபன் ஆகும். அடுத்து Take Photo என்று சொல்லுங்கள். போட்டோ எடுக்கும். இதுபோல நீங்கள் உங்கள் போனை வார்த்தையால் பயன்படுத்தலாம்.
ஸ்டேப் -6
அதுபோல நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை கூட கஷ்டப்பட்டு தேடாமல் உங்கள் வார்த்தையால் கண்டுபிடிக்கலாம்.
குறிப்பு: இந்த Settings உங்களுக்கு வேண்டாம் என்றால், மேல்கூறிய Settings உள்ளே சென்று Hey Google என்ற ஆப்ஷனை OFF செய்து கொள்ளலாம்.
Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |