உங்க போனில் Google Map இருக்கா..? அப்போ இந்த Tricks பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Google Map Settings in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..! உங்கள் போனில் இருக்கும் Google Map ஆப்பில் மறைந்துள்ள சில சூப்பரான Tricks பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் சில ஆப்கள் எல்லாம் Google சம்மந்தப்பட்ட ஆப்களாக இருக்கின்றன. உதாரணமாக,  Google Drive, Google Map, Google Photos, Google Chrome போன்று இருக்கின்றன. கண்டிப்பாக நாம் இதில் இருக்கும் Settings பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் Google Map -ல் இருக்கும் Settings பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

Google Map Tricks in Tamil:

Tricks -1 

Google Map Tricks in Tamil

முதலில் உங்களுடைய Google Map ஆப்க்குள் செல்ல வேண்டும். பின் அதில் கீழே Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Navigation Settings

பிறகு அதில் Navigation Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Play Voice Over Bluetooth

அதில்  Play Voice Over Bluetooth  என்ற ஆப்சன் இருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

Play Voice Over Bluetooth

அதேபோல அதன் கீழ்  Play Voice During Phone Calls  என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சனும் ON செய்யப்பட்டிருந்தால் அதையும் OFF செய்ய வேண்டும்.

காரணம், நீங்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு Google Map மூலம் செல்லும் போது, அந்த நேரத்தில் நீங்கள் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால், இந்த Google Map அங்கு செல்ல வேண்டும், இங்கு செல்ல வேண்டும் என்று இடையில் சத்தம் எழுப்பும்.

அதுபோல  நீங்கள் இப்படி அந்த ஆப்ஷனை OFF செய்து வைத்தால், நீங்கள் மற்றவர்களுடன் போன் பேசிக்கொண்டும் Google Map வசதியுடனும் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். 

 

உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!

Tricks -2 

அடுத்து அதேபோல உங்களுடைய Google Map -ல் இருக்கும் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Voice Selection

பின் அதில் Navigation Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதன் கீழே நகர்த்தி சென்றால் Voice Selection என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Voice

அதில் சில மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தமிழ் மொழி வேண்டுமென்றால் நீங்கள் அதை கிளிக் செய்யலாம்.

 இப்படி செய்வதால் Google Map உங்களுக்கு வலது பக்கம் திரும்பவும், இடது பக்கம் திரும்பவும் என்று தமிழில் வழிகாட்டும்.  

 

Youtube Settings -ல இவ்வளவு விஷயம் இருக்கா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement