How to Check TNEB Digital Meter Reading in Tamil..! | ஈபி பில் பார்ப்பது எப்படி.?
வீட்டிலேயே TNEB Digital meter reading பார்ப்பது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நம் வீட்டில் நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம், எவ்வளவு ரேடிங், எவ்வளவு யூனிட் பயன்படுத்தியுள்ளோம் என்பதை அலுவலர் சரிபார்த்து அதற்கான கட்டணத்தை குறித்து தருவார்கள். இனி அக்கற்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் நாம் எவ்வளவு யூனிட் பயன்படுத்தியுள்ளோம், என்பதை நாமே தெரிந்து கொள்ளலாம். அதேபோல் அதற்கான கட்டணத்தையும் நாமே தெரிந்து கொள்ள முடியும். சரி வாங்க அதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
உங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..! |
மின் கட்டணம் பார்ப்பது எப்படி? – TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி?
How to Check TNEB Digital Meter Reading ஸ்டேப்: 1
- இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லைங்க தாங்கள் வீட்டில் உள்ள TNEB digital meter ஒரு புஷ் பட்டன் இருக்கும். அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த புஷ் பட்டனை கிளிக் செய்ததும் முதலில் DATE காட்டப்படும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.
How to Check TNEB Digital Meter Reading ஸ்டேப்: 2
- அதன்பிறகு திரும்பவும் அந்த புஷ் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது TIME கட்டப்படும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.
How to View TNEB Digital Meter Reading ஸ்டேப்: 3
- பின்பு திரும்பவும் அந்த புஷ் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது மீட்டர் பாக்சில் நாம் எவ்வளவு பயன்படுத்தியுள்ளோம் என்பதை காட்டும். அதாவது நாம் எவ்வளவு யூனிட் பயன்படுத்தியுள்ளோம் என்று கட்டப்படும்.
- இந்த படத்தில்காட்டப்பட்டுள்ள 2604.2 KW h (kilowatt hour) என்பது நாம் பயன்படுத்தியுள்ள (கடந்த இரண்டு மாத) யூனிட்.
How to Check TNEB Digital Meter Reading ஸ்டேப்: 4
- மேல் காட்டப்பட்டுள்ள படத்தை இப்பொழுது பாருங்கள் டாட் Left சைடில் ஒன்றில் இருந்து ஒன்பது வரை நம்பர் மாறும், ஒன்பதாவது நம்பர் வந்தபிறகு டாட் Right சைடில் அதாவது 2605.0 KW h என்று மாறும். இது நாம் தினமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகின்றோம், அதற்கேற்ப மாறிவிடும். இதைத்தான் நாம் பயன்படுத்தும் யூனிட் என்பார்கள்.
- இந்த மாதிரி உங்கவீட்டில் எவ்வளவு யூனிட் காட்டுகிறதோ அவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும். இதை வைத்துதான் நாம் எவ்வளவு யூனிட், பயன்படுத்தியுள்ளோம், நமக்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
- அதாவது கடைசியாக உங்கள் மின் அட்டையில் குறித்த Reading-யும், இப்பொழுது குறித்து வைத்துள்ள Reading-யும் கழித்து பார்க்க வேண்டும்.
- உதாரணத்திற்கு 2480 கடைசியாக Reading check செய்தது என்று வைத்து கொள்ளலாம். 2604 என்பது தற்போது Reading check என்று வைத்து கொள்வோம். இவற்றை இரண்டியும் கழித்து பார்த்தால் 2604-2480 = 124 என்று வரும். இதுதான் நாம் இதுவரை பயன்படுத்திய யூனிட்.
EB BILL CALCULATE பண்ணுவது எப்படி ?
- தமிழக அரசு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கின்றது. 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது அல்லவா. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை படித்து தாங்கள் எவ்வளவு யூனிட் பயன்பன்ப்படுத்தியுள்ளீர்கள், அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை யூனிட் கால்குலேட் (Calculate) செய்யுங்கள்.
- அதாவது 101 இருந்து 200 யூனிட் பண்படுத்தியவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 1.5 ரூபாய், எனவே 124 யூனிட் என்றால் 100 யூனிட்டை கழித்து கொள்ளுங்கள், பாக்கி 24 யூனிட் இருக்கும் 24 X 1.5 பெருகினால் 36 ரூபாய் செலுத்த வேண்டும்.
From Unit | To Unit | Rate (Rs.) | Max.Unit |
1 | 100 | 0 | 100 |
1 | 100 | 0 | 200 |
101 | 200 | 1.5 | 200 |
1 | 100 | 0 | 500 |
101 | 200 | 2 | 500 |
201 | 500 | 3 | 500 |
1 | 100 | 0 | 9999999 |
101 | 200 | 3.5 | 9999999 |
201 | 500 | 4.6 | 9999999 |
501 | Above | 6.6 | 9999999 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |