How to Connect Wifi Without Password in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் இல்லாமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது. YouTube-யில் Video பார்க்க வேண்டும் என்றாலும் சரி, WhatsApp-யில் Chat செய்ய வேண்டும் என்றாலும் சரி, Hotstar, Netflix இவற்றில் ஏதாவது படம் பார்க்க வேண்டும் என்றாலும் சரி இது போன்ற பலவகையான அம்சங்களை பயன்படுத்த வேண்டும் என்றாலும் சரி அதற்கு Internet என்பது மிகவும் அவசியம் தேவை. அதற்காக நாம் ரீசார்ஜ் செய்திருப்போம், சில சமயம் அன்றைய நாளிற்கான Data காலியாக்கிருக்கும். பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதாக இருக்கும். ஒரு நாளுக்காகவா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று, நமது சகோதர்களிடமோ, சகோதரியிடமோ அல்லது நண்பர்களிடமோ யார் பக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களை சிறிது நேரம் Hotspot-ஐ On செய்ய சொல்லி நாம் Wi-Fi மூலம் Net பயன்படுத்துவோம். அல்லது மற்றவர்களை நமது நெட்டை பயன்படுத்திக்கொள்ள சொல்வோம். அப்போது நமது WiFi-க்கு password போட்டு வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இல்லை என்றால் நாம் Hotspot On செய்யும் போது அனைவருமே நமது நெட்டை எளிதாக பயன்படுத்தி கொள்வார்கள்.
யாரும் நமது அனுபதி இன்றி Net Use பண்ண கூடாது என்று நாம் கண்டிப்பாக Password போட்டு வைத்திருப்போம். அந்த வகையில் நமது Wi-Fi Password-ஐ யாருக்கும் சொல்லாமல் மாற்றங்களுக்கு நமது Wi-Fi-ஐ Connect செய்துதர முடியும் அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Password சொல்லாமல் மற்றவர்களுக்கு WiFi Connect செய்வது எப்படி?
ஸ்டேப்: 1
முதலில் உங்கள் ஆண்ட்ராயிட் மொபைலை எடுத்துக்கொள்ளுங்கள்..
ஸ்டேப்: 2
பிறகு அவற்றில் Hotspot Setting-ற்கு செல்லுங்கள்.
ஸ்டேப்: 3
ஸ்டேப்: 4
அவற்றில் Share QR Code என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 5
அவற்றை கிளிக் செய்த பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு QR Code வரும் அவற்றை, உங்கள் நண்பர் அவர்களுடைய Wifi setting-யில் இருந்து ஸ்கேன் செய்தால் போதும். உங்கள் நண்பருக்கு உங்களின் WiFi Connect ஆகிவிடும். நீங்கள் உங்கள் நண்பருக்கு உங்கள் Wifi-யின் Password சொல்லாமல் அவர்களுக்கு உங்கள் Wifi Net-ஐ Connect செய்து தர முடியும். இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்கள் இதனால் உங்கள் Wifi Password மற்றவர்களுக்கு Share செய்யாமல் இருக்க முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Incoming Call -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது தெரியாம போச்சே..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |