தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?
தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – இப்போது யூடியூப்பில் நமக்கு பிடித்தமான பாடல், வீடியோக்களை, நம்முடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகவும் வைக்கலாம். அதுவும் 1 மணி வீடியோவில் இருந்து 1 நிமிட வீடியோ மட்டும் கூட தனியாக பிரித்தெடுத்து ஸ்டேட்டஸாக வைத்துக் கொள்ளலாம்.
சரி வாங்க இதற்கான சிறந்த வழிமுறைகளை (How to make YouTube video as whatsapp status) பற்றி இப்போது நாம் இங்கு படித்தறிவோம்.
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதும், அதை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று பார்ப்பதும் ஒரு தனி சுகம்தான். பலர் மாலை நேரம் வந்தால் போதும் விதவிதமாக ஸ்டேட்டஸ் வைப்பார்கள்.
அதாவது ரொமன்டிக் ஸ்டேட்ஸ் வைப்பதும், கவிதை, தத்துவம், அரசியலை அள்ளி வீசுவதுமாக தான் பலருடைய எண்ணங்கள் இருக்கும்.
தொழில்நுட்ப செய்திகள் – குழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் !!! |
இதே போன்று யூடியூப் வீடியோஸ் பார்க்கும் போது, அதில் சில வசனங்கள், காமெடி, ரொமன்டிக் பாடல்கள் போன்றவை நமக்கு மிகவும் பிடித்து போய்விடும். அதை நம்முடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்று எண்ணமும் தோன்றும். ஆனால், அதை எப்படி வைப்பது என பலருக்கும் தெரியாது. அதற்கு ஒரு எளிய வழிமுறை நிறைய உள்ளது.
பலவகையான வெப்சைட், system software மற்றும் பலவகையான android app ஆகியவை இந்த வசதியை நமக்கு வழங்குகிறது. இதற்கு பின்வரும் எளிய வழிமுறையைப் பின்பற்றினாலே போதும்.
தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – எளிய வழிமுறைகள்:-
வெப்சைட் மூலம் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக எளிய வழிமுறைகள்:-
1. தங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோ பக்கத்தின் URL ஐ Copy செய்து கொள்ள வேண்டும். அல்லது ‘Share’ என்ற ஆப்ஷன் வீடியோவின் கீழ் இருக்கும். அதனை க்ளிக் செய்து Copy Link என்பதை தேர்வு செய்ய வேண்டும்.. இப்போது உங்கள் வீடியோ லிங்க் Copy ஆகியிருக்கும்.
2. பின்பு, இதற்கென்று உள்ள வெப்சைட்டை ஒபன் செய்ய வேண்டும்.
3. அதில் வீடியோ லிங்க் என்ற பகுதியில், உங்கள் யூடியூப் லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்.
4. இப்போது யூடியூப் வீடியோ இதில் காட்டப்படும். வீடியோவில் எந்த பகுதி உங்களுக்கு வேண்டுமோ அதில் கர்சரை நகர்த்தி கொண்டு வரவேண்டும். பின் Start என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. எதுவரைக்கும் வேண்டுமோ அதுவரைக்கும் வீடியோவை பார்த்து விட்டு, End ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.
6. இப்போது டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். அதை அப்படியே வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
Android App மூலம் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க எளிய வழிமுறைகள்:-
Android App மூலம் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு முதலில் play store சென்று. அவற்றில் youtube downloader apps என்று டைப் செய்து, search செய்ய வேண்டும்.
அவற்றில் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கென்ற பலவகையான youtube downloader apps உள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை download செய்து கொண்டு அவற்றின் மூலமாகவும் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து கொள்ளலாம்.
சாப்ட்வேர் மூலம் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க:
சாப்ட்வேர் மூலம் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க இப்போது பலவகையான சாப்ட்வேர் உள்ளது. எனவே அவற்றின் மூலமாகவும் யூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்! புது அப்டேட்!!! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..! |