உங்கள் ஸ்மார்ட் போனின் Pattern -யை மறந்து விட்டீர்களா..? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்..!

How To Unlock Pattern Lock in Tamil

How To Unlock Pattern Lock in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் கட்டாயம் இருக்கும். பொதுவாக ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் போனில் இருக்கும் படங்கள் மற்றும் சில தகவல்களை மற்றவர்கள் பார்க்க கூடாது என்பதற்காக Password அல்லது Pattern போட்டு அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.

அந்த வகையில் சில நேரங்களில் அந்த Password அல்லது Pattern மறந்து விடுவார்கள். அதை சரி செய்வதற்காக கடைகளில் போனை கொடுத்து பணத்தை செலவு செய்வார்கள். இனி அப்படி செய்ய தேவை இல்லை. எந்த செலவும் இல்லாமல் நீங்கள் மறந்த Password அல்லது Pattern சரி செய்வதற்கு இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் நீங்கள் மறந்த போன் Pattern -யை Unlock செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்கள் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

மறந்த போன் Pattern -யை Unlock செய்வது எப்படி..? 

Step -1

முதலில் எந்த போனின் Pattern மறந்து விட்டதோ அந்த போனை Switch Off செய்ய வேண்டும்.

உங்களுடைய போனில் On செய்வதற்கு ஒரு Power Button மற்றும் Sound வைப்பதற்கு 2 volume Button கொடுக்க பட்டிருக்கும். இதுபோன்ற 3 பட்டன்கள் அனைத்து போன்களிலும் இருக்கும்.

அதில்  நீங்கள் On செய்வதற்கான பட்டனையும் Sound அதிகமாக வைப்பதற்கு பயன்படுத்தும் பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும் .

Step -2

Wipe data Factory Reset

இப்பொழுது உங்கள் போன் வேற முறையில் ஓபன் ஆகும். அதில் சில Options கொடுக்கபட்டிருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் போனை Touch செய்து பயன்படுத்த முடியாது.

 அந்த நேரத்தில் போனில் கீழும் மேலும் நகர்த்தி Select செய்வதற்கு volume Button -யை பயன்படுத்த வேண்டும். அதுபோல நீங்கள் தேர்ந்தெடுத்த ஆப்ஷனை Ok செய்வதற்கு Power Button -யை அழுத்த வேண்டும்.  

Step -3

Wipe data Factory Reset

பின் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் volume Button -யை பயன்படுத்தி Wipe data Factory Reset என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய Power Button -யை அழுத்த வேண்டும்.

Step -4

Factory Data Reset

பின் அதில் Factory Data Reset என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் Reboot Use Data என்ற ஆப்சன் தோன்றும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்களுடைய போனை On செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுடைய போன் Password அல்லது Pattern இல்லாமல் போன் ஓபன் ஆகும்.

அவ்வளவு தான் நண்பர்களே. இனி நீங்கள் எந்த செலவும் இல்லாமல் உங்கள் போனின் Password அல்லது Pattern வீட்டிலிருந்தே Unlock செய்ய முடியும்.

Google Chrome Setting -ல் மாற்ற வேண்டிய விஷயங்கள் என்ன..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்