உங்க போனில் இதெல்லாம் ஆன்ல இருந்தால் போன் கண்டிப்பா ஹேங் ஆகும்..!

Advertisement

How To Stop Phone Hanging Problem in Tamil

நீங்கள் போன் வாங்கிய போது நல்லா தான் இருக்கும். நாளடைவில் போன் பயன்படுத்தினால் திடீர் திடீரென்று ஹேங் ஆகும். போன் ஹேங் ஆகிறது என்ன செய்வது தெரியவில்லை என்று யோசிப்பீர்கள்.! ஆனால் போனை பயன்படுத்தாமல் இருப்பீர்களா.! காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை போனுக்கு ஓய்வே இல்லை. அதற்கு மட்டும் வாய் மட்டும் இருந்தால் அழுதுவிடும். அதனால் அழுக முடியாமல் தான் போன் ஹேங் ஆகிறது. போன் ஹேங் ஆகுவதை தடுப்பதற்கு சில SETTINGNS -யை ON செய்தும் OFF செய்தும் வைக்க வேண்டும். அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Play Store Settings Change in Tamil:

mobile hanging problem solution in tamil

 

முதலில் Play store-க்கு சென்று அதில் Settigns என்பதை கிளிக் செய்யவும்.

mobile hanging problem solution in tamil

பின் அதில் Network preference என்பதில் Auto update apps என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

mobile hanging problem solution in tamil

அதில் மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Dont auto update apps என்பதை ON -ல் வைத்து கொள்ளவும். இதை ஆனில் வைப்பதால் போன் ஹேங் ஆகாமலும், ஸ்லோ ஆகாமலும் இருக்கும்.

Developer Options Tamil:

mobile hanging problem solution in tamil

Settings என்ற ஆப்ஷனில் Developer ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Windows Animation Scale, Transition Animation Scale, Animation duration Scale போன்றவற்றை கிளிக் செய்து Animation என்பதை OFF செய்ய வேண்டும்.

mobile hanging problem solution in tamil

அடுத்து Background Process Limit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

mobile hanging problem solution in tamil

பின் அதில் Background Process என்பதை ON செய்து வைக்கவும். இதை ஆனில் வைப்பதால் போன் Background -ல் சில ஆப்ஸ் ரன் ஆவதை தடுக்க முடியும்.

Cache Clear in Tamil:

போனில் ஹேங் ஆகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதுதான். இதனை நீங்கள் செய்தாலே உங்கள் போன் ஸ்பீடு ஆக இருக்கும். ரொம்ப காலங்களாக போனில் சேமித்து வரும் போட்டோ வீடியோ இன்னும் பல விஷயங்கள் அதிகமாக இருந்தால் போன் ஹேங் ஆகும். இதனை சரி செய்ய போனில் Settings -க்கு செல்லவும். அதில் Storage என்பதை கிளிக் செய்யவும். பின் Clear The Cache என்பதை கிளிக் செய்யவும். இதை செய்தவுடன் உங்கள் போன் ஸ்பீடாக Work ஆகும்.

இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement