ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் MOBILE எண் மாற்றம் செய்வது எப்படி..?

Advertisement

Mobile Number In Aadhaar Card Online Update Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… ஆதார் அட்டை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்று உங்களுக்கு தெரியும். ஆதார் கார்டு ஒரு மனிதனின் ஆதாரமாக விளங்குகிறது. நாம் எந்த இடத்திற்கு சென்றாலும் ஆதார் அட்டையை இருக்கிறதா என்று தான் கேட்பார்கள்.

பள்ளியில் தொடங்கி மருத்துவமனை வரை ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதார் அட்டையின் சேவைகளை தெரிந்து கொள்வதற்கு கட்டாயம் மொபைல் போன் வேண்டும். அதேபோல் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைந்திருக்க வேண்டும்.

ஆதார் அட்டையில் உங்களின் புதிய நம்பரை மாற்றவும் செய்யலாம் அதேபோல் நம்பரை சேர்க்கவும் முடியும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் உங்கள் புதிய மொபைல் நம்பரை ஆதார் கார்டு -ல் புதிப்பிப்பது அல்லது மாற்றம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள   புகைப்படத்தை மாற்றுவது எப்படி..?

ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி..? 

நாம் ஆதார் அட்டை வாங்கும் போது கொடுத்த மொபைல் எண் நம்மிடம் இருக்காது. சில சமயங்களில் நாம் ஆதார் அட்டையில் கொடுத்த மொபைல் எண்ணை மாற்றம் செய்திருப்போம். உங்களுடைய மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Step -1  

முதலில் ஆதாரின் UIDAI என்ற https://ask.uidai.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step -2

பிறகு நீங்கள் வைத்திருக்கும் புதிய மொபைல் நம்பரை சரியாக பதிவு செய்ய வேண்டும். பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாவை கோடுகளை உள்ளிட வேண்டும்.

Step -3  

பின் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அந்த OTP எண்ணை Type செய்ய வேண்டும்.

Step -4

பின் மேலே Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் உங்களுடைய ஆதார் எண்ணில் இருக்கும் பெயரையும் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும்.

Step -5

பின் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் Mobile Number என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் மறுமுறையும் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

Step -6 

அதன் பின் மறுபடியும் இந்த மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அந்த OTP  எண்ணை கொடுத்து Verify OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step -7 

பின் ஒரு திரை தோன்றும். அதன் மேல் இருப்பதை படித்து கட்டத்தில் டிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.

Step -8

பின் Appointment Submitted என்று வரும். பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் 30 நாட்களுக்கு புதிப்பிக்கப்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement