Calculator ஆப் மூலம் உங்களுடைய போட்டோவை மறைக்கலாம்.!

Advertisement

How to Open Calculator Hide App in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் Calculator ஆப் மூலம் உங்களுடைய போட்டோவை  எப்படி மறைப்பது என்று  தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக நம்முடைய போட்டோஸ் எல்லாம் Gallery ஆப்களில் இருக்கும். பொதுவாக நம்முடைய மொபைல் போன்களை தொட்டாலே அதிகமாக கோவம் வரும், அதிலும் நமது  அனுமதியில்லாமல்  நம்முடைய Gallery க்கு சென்று நம்முடைய போட்டோஸ்களை பார்த்தால் இன்னும் அதிகமாகவே கோவம் வரும் அல்லவா, எனவே, நம்முடைய போட்டோவை இனிமேல் யாரும் பார்க்காமல் Calculator ஆப் மூலம் மறைக்கலாம். மேலும் இந்த Calculator ஆப்பில்   எப்படி  போட்டோவை upload செய்வது என்றும் தெரிந்துகொள்வோம். 

குறிப்பு: இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆப் உங்களுடைய மொபைலில் இருக்காது. இதனை தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டியது இருக்கும், எனவே இதை பதிவிறக்கம் செய்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.   

இதையும் படியுங்கள் 👇

எந்த விதமான ஆப்பும் ஏற்றாமல் வாட்ஸ் அப் டிபி போட்டோவை தெரிந்தவர்களுக்கு மட்டும் காட்டும் படி வைக்கலாம்

How to Use Calculator Hide App in Tamil:

ஸ்டேப்:1

 how to open calculator hide app in tamil

முதலில் உங்களுடைய மொபைலை எடுத்துக் கொண்டு அதில் Google Play Store –க்கு செல்லவும். பிறகு Search செய்யும் இடத்தில் Calculator Hide App  என்று Search செய்யவும். Search செய்தவுடன் அதிகமான Calculator Hide App கள் வரும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ளே  இருக்கும். முதல் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:2

 how to open calculator hide app in tamil

அடுத்ததாக ஆப்பை பதிவிறக்கம் செய்ததும் ஓப்பன் கேட்கும், ஆப்பை ஓப்பன் செய்ததும்,  Creat New Password என்று அதில் – – – – நான்கு கோடுகள் இருக்கும், அதில்,  உங்களுக்கு நியாபகம் உள்ளது போல நான்கு எண்களை நிரப்பிய பிறகு, = ஈக்வல்ட் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மறுபடியும் எண்களை சரிபார்ப்பதற்காக conform கேட்கும்,  நீங்கள் நிரப்பிய நான்கு எண்களையும் கொடுத்த பிறகு conform செய்து = ஈக்வல்ட் கொடுக்க வேண்டும். 

ஸ்டேப்:3

 how to open calculator hide app in tamil

= ஈக்வல்ட் கொடுத்த பிறகு, ஒரு பேஜ் ஓப்பன் ஆகும், அதில் Where are you Born என்று கேட்கும்.  அதில் உங்களுடைய பிறந்த தேதியை கொடுக்க வேண்டும். கொடுத்த பிறகு, கீழ் இருக்கும் Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:4

 how to open calculator hide app in tamil

Next என்பதை கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓப்பன் ஆகும். அதில் I Got It  என்று இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு உங்களுடைய photos, videos, file  போன்றவற்றை மறைப்பதற்கு ஆப்ஷன்கள் இருக்கும்.  அதில் நீங்கள் எதை மறைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்ய வேண்டும்.  எடுத்துக்காட்டுக்கு: போட்டோவை எப்படி மறைப்பது என்று தெரிந்துகொள்வோம். 

ஸ்டேப்:5

 how to open calculator hide app in tamil

முதலில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களில் photos என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு, + என்று இருக்கும் அதில் choose images form என்று இருக்கும். அதன் கீழே Gallery, folder என்று இருக்கும். அதில் Gallery என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டேப்:6

 how to open calculator hide app in tamil

Gallery என்பதை கிளிக் செய்ததும், உங்களுடைய Photos அனைத்தும் வந்துவிடும். அதில் நீங்கள் எந்த போட்டோவை மறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மட்டும் டிக் செய்ய வேண்டும்.  டிக் செய்ததும் கீழே Hide என்று இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்:7

 how to open calculator hide app in tamil

Hide செய்த பிறகு நீங்கள் தேர்வு செய்த போட்டோ அனைத்தும் இந்த கால்குலேட்டர் ஆப்பில் வந்து விடும். மீண்டும் இந்த போட்டோவை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், Calculator ஆப்பை ஓப்பன் செய்ய வேண்டும். செய்தபிறகு நீங்கள் கொடுத்த Password அதில் நிரப்பி  ஈக்வல்ட் கொடுக்க வேண்டும்.  கொடுத்தபிறகு அங்கு இருக்கும் Gallery -யில் உங்களுடைய போட்டோஸ் இருக்கும். இந்த ஆப் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். 

இதையும் படியுங்கள் 👇

Whatsapp- யில் இது தெரியாமல், யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா.?
உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement