Instagram Safety Settings in Tamil
வணக்கம் அன்பு நேயர்களே..! இன்றைய பதிவில் Instagram பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் இதுவும் ஓன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இதை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அதில் ஆபத்துகளும் இருக்கிறது. எப்படி நாம் பாதுகாப்பாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா..? Instagram பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இன்ஸ்டாவில் போஸ்ட் லைக்ஸ் மற்றும் வீவ்ஸ் மறைப்பது எப்படி.? |
Instagram Safety Tricks in Tamil:
இந்த இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாவனவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். இதை நாம் பயன்படுத்தும் வகையில் தான் அதில் நன்மைகளும் ஆபத்துகளும் இருக்கிறது. அப்படி நாம் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
Step -1
முதலில் உங்கள் இன்ஸ்டாகிராமில் மேலே 3 கோடுகள் போன்ற அமைப்பு இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அதில் Settings என்பதை கிளிக் செய்து அதில் Security என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் நம்முடைய இன்ஸ்டாகிராம் Id யின் Log in பாதுகாப்பிற்காக 6 ஆப்சன் இருக்கும்.
அதில் Login Activity என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நம் Instagram Id எந்த Location ல் யாருடைய மொபைலில் log in செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இதன் மூலம் அதை நம் மொபைலில் இருந்து log out செய்து கொள்ளலாம்.
Step -2
இரண்டாவதாக அதே Security என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கடைசியில் இருக்கும் Security Checkup என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் ஒரு 4 ஆப்சன் தோன்றும். அதில் முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் Password -ஐ கொடுத்து 2 ஆவதாக வேறொரு புதிய Password கொடுக்க வேண்டும்.
அடுத்து நீங்கள் Instagram ஓபன் செய்யும் போது கொடுத்த Email Id யை சரியாக கொடுக்க வேண்டும். பின் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த எண்ணிற்கு ஒரு OTP வரும். அதை சரியாக கொடுத்து Enter செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் உங்களுடைய இன்ஸ்டாகிராம் Id பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய Instagram Id யை யாராலும் திருட முடியாது.
உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |