Mobile Heating Problem in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! நாம் ஸ்மார்ட் போனை அதிக நேரம் பயன்படுத்தினால் போன் அதிக சூடாகும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதுபோல நாம் போனை பயன்படுத்தும் போது அது அதிகமாக சூடாகினால் ஸ்மார்ட் போனில் இருக்கும் பாகங்கள் பாதிப்பு அடையாளம். அதனால் நாம் ஸ்மார்ட் போனை சூடாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இன்று நாம் ஸ்மார்ட் போன் சூடாவதை தடுப்பதற்கான Settings பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அந்த Settings பற்றி தெரிந்து கொள்வோம்..!
உங்களது போனை ஹேக் செய்திருக்கிறார்கள் என்பதை இதை வைத்து கண்டு பிடித்துவிடலாம்..! |
Mobile Heating Problem Solution in Tamil:
Solution – 1
முதலில் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Security என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Location என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதன் உள்ளே சென்றால் Location Services என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Wi-Fi Scanning மற்றும் Bluetooth Scanning என்று 2 ஆப்சன் இருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.
காரணம், இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். இருந்தாலும் இந்த 2 ஆப்சனும் ON -ல் இருப்பதால் உங்களுடைய போன் அதிகளவில் சூடாகிறது. அதுமட்டுமில்லாமல், போன் Battery குறைவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த ஆப்ஷனை OFF செய்வது மிகவும் நல்லது.
மொபைல் போன் நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையா..! |
Solution – 2
அடுத்து உங்கள் போன் Settings -ல் About Phone என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் Software Information என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Build Number என்ற ஆப்சன் இருக்கும் அதை 7 முறை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடைய Settings உள்ளே Developer Option என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Don’t Keep Activities என்ற ஆப்சன் இருக்கும். அதை ON செய்து கொள்ளுங்கள்.
அடுத்து அதன் கீழ் Background Process Limit என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் No Background Processes என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த Settings எல்லாம் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும், இவை தானாக இயங்கி கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் இதுபோல செய்வதால் உங்கள் போன் சூடாவதை தடுக்க முடியும். மேலும் நீங்கள் போனை பயன்படுத்தும் போது Battery குறையாமலும் இருக்கும்.உங்கள் மொபைல் Internet Speed -ஐ 4G யில் இருந்து 5G -க்கு மாற்றுவது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |