உங்கள் போனின் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்

phone battery life tips in tamil

Phone Battery Life Tips in Tamil

வணக்கம் நண்பர்களே.! உங்களது போனின் செயல்திறனை அதிகரிப்பதில் பேட்டரி முக்கியமாக விளங்குகிறது. போனின் செலயல்திறனை அதிகரிப்பதற்கு தரமான பேட்டரியை பயன்படுத்துவது அவசியமானது. ஆனால் போனில் இருக்கும் பெரிய பிரச்சனை விரைவாக பேட்டரியின் நிலை முடிவடைவது தான். போனை சரியாக பயன்படுத்தினால் பேட்டரியின் ஆயுளை அதிகப்படுத்தலாம். வாங்க போனின் பேட்டரியை அதிகப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதவில் படித்து தெரிந்து கொள்வோம்.

போனின் பேட்டரியின் ஆயுளை அதிகப்படுத்த:

போனில் Data வை பயன்படுத்தாத போது Net-யை ஆப் செய்து வையுங்கள்.

RAM cleaning apps என்ற எந்த விதமான ஆப்களையும் போனில் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.

உங்களது போனில் இருக்கும் தேவையில்லாத ஆப்களை முதலில் கண்டுபிடியுங்கள். அதன் பிறகு அந்த ஆப்பை Delete செய்து விடுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

போனில் Location என்ற ஆப்ஷனை எப்பொழுதும் on செய்து வைக்காதீர்கள். இதனுடைய உதவி தேவையில்லாத போது ஆப் செய்வது சிறந்தது. இப்படி செய்வதினால் போன் பேட்டரியின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.

Auto brightness என்ற ஆப்ஷனை ஆப் செய்து வைப்பது நல்லது.

போனில் வைக்கும் Wallpaper ரொம்ப கலரா வைக்காதீர்கள். அதிலும் live wallpaper வைக்க கூடாது. இதை வைக்கும் போது அழகாக இருக்கும். ஆனால் அது பேட்டரியின் ஆயுளை குறைக்கும்.

போனை வாரத்தில் மூன்று முறை Restart செய்வது பேட்டரியின் ஆயுளை அதிகப்படுத்தலாம். Restart செய்வதை விட ஒரு நிமிடம் Switch ஆப் செய்து on செய்வது சிறந்தது.

அதிகமான பேட்டரியின் செயல்பாட்டை எடுத்து கொள்ளும் எந்த Games -களையும் பயன்படுத்தாதீர்கள்.

இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். போனின் சார்ஜரை தவிர மற்ற சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் Smart Phone -ல் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News