உங்கள் போன் Camera -வில் இருக்கும் இந்த Settings -ஐ உடனே மாத்திடுங்க..!

Advertisement

Camera Settings in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய போனில் இருக்கும் ஒரு சூப்பரான Settings பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ Apps இருக்கின்றன.

இருந்தாலும் அதில் இருக்கும் Settings எல்லாம் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல அனைத்து ஸ்மார்ட் போனிலும் கட்டாயம் கேமரா இருக்கும். Camera -வில் இருக்கும் Settings உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Camera Secret Settings in Tamil:

Settings -1

Camera

முதலில் உங்களுடைய போன் Camera உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே 3 கோடுகள் போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின் அதில் Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

Location

பின் அதில் Location என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இந்த Location என்ற ஆப்சன் ON-ல் இருந்தால், நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து போட்டோ எடுத்து அதை Facebook அல்லது Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரும் போது நீங்கள் இருக்கும் இடத்தை அந்த போட்டோவின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.  

அதனால் இந்த Location என்ற ஆப்சனை OFF செய்வது நல்லது.

போனில் போட்டோ எடுத்து விட்டு போன் சரியில்லை என்று சொல்லாமல் இப்படி பண்ணுங்க போட்டோ பக்காவாக இருக்கும்..!

Settings -2 

Mirror Front Camera

அடுத்து உங்களுடைய போனில் Camera உள்ளே சென்று அதில் இருக்கும் 3 கோடுகள் போன்ற ஆப்ஷனை கிளிக் செய்து Settings உள்ளே செல்ல வேண்டும்.

பின் அதில் Mirror Front Camera அல்லது Mirrored Selfie என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்சன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இந்த ஆப்சன் ON -ல் இருப்பதால் நீங்கள் போட்டோ எடுக்கும் போது அது வேற மாதிரி தெரியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஏதாவது ஒரு T-Shirt போட்டு கொண்டு Selfie எடுக்கும் போது அதில் இருக்கும் எழுத்துக்கள் தலைகீழாக தெரியும்.  

அதனால் இந்த ஆப்ஷனை OFF செய்து வைத்தால் நீங்கள் எடுக்கும் Selfie தலைகீழாக தெரியாது.

இதையும்  படியுங்கள் ⇒ எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement