உங்க போனில் Developer Option இல்லையா..? எந்தவொரு ஆப்பும் ஏற்றாமல் Developer Option கொண்டு வரலாம்..!

Advertisement

Developer Options Enable

இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்பட கூடிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஸ்மார்ட் போனில் இருக்கும் Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நாம் பயன்படுத்தும் சில போன்களில் Developer Options என்ற ஆப்சன் இருக்கும். ஆனால் சில ஸ்மார்ட் போன்களில் அந்த ஆப்சன் இருக்காது. அந்த ஆப்சன் போனில் இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆப்களை டவுன்லோட் செய்வீர்கள். ஆனால் எந்தவொரு ஆப்பும் ஏற்றாமல் Developer Options Enable செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Developer Options in Tamil: 

ஸ்மார்ட் போனில் இருக்கும் பலவிதமான Settings -களுக்கு இந்த Developer Options தான் பயன்படுகிறது. இந்த Developer Options நம் போனில் இருப்பது  அவசியமானது என்றே சொல்லலாம். ஆனால் இந்த Developer Options எல்லா போன்களிலும் இருப்பதில்லை.

சில போன்களில் Settings என்ற ஆப்ஷனில் இருக்கும். ஆனால் சில போன்களில் இந்த ஆப்சன் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கும். அது தெரியாமல் பலரும் பல விதமான ஆப்களை டவுன்லோட் இந்த ஆப்ஷனை கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஆப்ஷனை நாம் சுலபமாக கொண்டு வரலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!

Developer Options Enable in Tamil: 

ஸ்டேப் -1 

About Phone

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings என்ற ஆப்சன் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் சில ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் About Phone என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -2

MIUI Version

பின் ஒரு திரை தோன்றும். அதில் நிறைய ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் MIUI Version என்ற ஆப்சன் இருக்கும். அதேபோல சில போன்களில் Build Number என்று இருக்கும்.

ஸ்டேப் -3 

Developer Options Enable

 அந்த ஆப்ஷனை 7 முறை கிளிக் செய்ய வேண்டும். இதுபோல 7 முறை கிளிக் செய்தால் Developer Options Enable ஆகிவிடும். சில போன்களில் 3 முறை கிளிக் செய்தாலே Developer Options Enable ஆகிவிடும். இந்த ஆப்சன் Enable ஆனது கீழே உங்களுக்கு காட்டும்.  

ஸ்டேப் -4 

Additional Settings

இந்த ஆப்ஷன் எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் Additional Settings என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

Developer Options

அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பின் அதில் கீழே Developer Options இருக்கும்.

இதுபோல சுலபமாக நீங்களும் உங்கள் போனில் Developer Options -ஐ Enable செய்து கொள்ளுங்கள் நண்பர்களே..!

Google Chrome-ல் இவ்ளோ Tricks இருக்கா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
Google Photos ஆப் Use பண்றவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement