Snapchat பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Snapchat in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி பட்டன் போனாக இருந்தாலும் சரி அதில் கட்டாயம் Camera இருக்கும். Camera போனில் உருவாக்கப்பட்ட பிறகு தான் நம் வாழ்வில் நடக்கும் சிறிய நிகழ்வுகளை கூட நம்மால் பதிவு செய்ய முடிந்தது. அதேபோல இன்றைய நிலையில் Camera -வை போல் உருவாக்கப்பட்டது தான்  Snapchat ஆகும். இதன் மெல்லாம் நிறைய போட்டோக்களை எடுத்து வருகிறோம்.எனவே Snapchat பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Snapchat Information in Tamil: 

Snapchat Information in Tamil

 

Snapchat ஒரு செய்தி தளம் என்றும் சமூக வலைத்தளம் என்று சொல்லப்படுகிறது. Snapchat என்பது ஒரு அமெரிக்க மல்டிமீடியா உடனடி செய்தியிடல் செயலி என்று சொல்லப்படுகிறது.

 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் Stanford University -ல் படித்து வந்த Evan Spiegel , Bobby Murphy, மற்றும் Reggie Brown என்ற 3 மாணவர்கள் இந்த Snapchat மென்பொருளை உருவாக்கி உள்ளனர்.  

இதன் மூலம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர முடியும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. அதுபோல இதன் மூலம் அனுப்பிய படங்களும் காணொளிகளும் “ஸ்னாப்” (Snap) என்று அழைக்கப்படுகின்றன. 

Facebook உருவான வரலாறு தெரியுமா..?

 

மேலும் இதன் மூலம் அனுப்பிய செய்திகளை நம்மால் 10 நொடிகளுக்கு மட்டுமே காண முடியும். 10 நொடிகளுக்குப் பிறகு அது தானாகவே நீங்கிவிடும்.

அதாவது, Snapchat பகிர்ந்து கொள்ளும் அனைத்து உள்ளடக்கத்தையும் குறுகிய காலத்திற்கு மட்டுமே வைத்து கொள்ளும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவற்றின் பெறுநர்களால் பார்க்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு அது மறைந்து விடும்.

மேலும் மெய்நிகர் ஸ்டிக்கர்கள் (Virtual Stickers) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (Augmented Reality) பொருள்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில்  பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கும் செயலியாக இது இருக்கிறது.

 ஜூலை 2021 ஆம் ஆண்டில் Snapchat தினசரி செயலில் 293 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. இது ஒரு வருடத்தில் 23% வளர்ச்சியை கண்டது. அதுபோல Snapchat சராசரியாக ஒவ்வொரு நாளும் 4 பில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இதன் மூலம் அனுப்பப்படுகின்றன. 
நீங்கள் Whatsapp பயன்படுத்துகிறீர்களா அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்..!

 

மே 2012 ஆம் ஆண்டு வரை, ஒரு நொடிக்கு 25 படங்கள் Snapchat மூலம் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நவம்பர் 2012 -ல் பயனர்கள் Snapchat iOS பயன்பாட்டில் 1 பில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அதுபோல இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு 20 மில்லியன் புகைப்படங்கள் Snapchat மூலம் பகிரப்படுகின்றன.

ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு Snapchat பணியைத் தொடர எந்தத் திட்டமும் இல்லை என்றும் அனைத்து அசல் ஸ்கிரிப்ட் உள்ளடக்கத்தையும் நிறுத்துவதாகவும்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement