Twitter in Tamil
நாம் தினமும் பயன்படுத்தும் வாட்சப், Facebook மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் Twitter-ம் ஒன்றாக இருக்கிறது. நாம் அதிமாக பயன்படுத்தும் செயலிகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக யாருக்கும் இருப்பதில்லை. நாம் உபயோகப்படுத்தும் செயலியில் என்ன இருந்தால் நமக்கு என்ன அதனை நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்தினால் போதும் என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக சிலர் அதனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை வளர்த்து கொள்கின்றனர். ஆகவே உங்களுக்கு பயனளிக்கும் வகையில் Twitter App பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Twitter Information in Tamil:
நாம் பயன்படுத்தும் ட்விட்டர் சமூக செயலியானது அமெரிக்காவின் சமூக வலைத்தளம் ஆகும். இதனை ஜாக் டோர்சே, நெள கிளாஸ், பிஸ் ஸ்டோன், மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து 2006- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதம் Twitter என்ற சமூக வலைத்தளத்தை வெளியிட்டனர்.
ஆரம்ப காலத்தில் இதனுடைய பயன்பாடு அதிகமாக இல்லை என்றாலும் கூட அதன் பிறகு மக்கள் அனைவரும் இந்த செயலியை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர்.
இந்த சமூக வலைத்தளம் தொடங்கி காலத்தில் சரியான வளர்ச்சி இல்லை. அதன் பின்பு குறைந்த அளவு நெட்வொர்க் வசதி உள்ளபோதே இது அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
ஆனால் 2012-ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயனர்களால் நாள் ஒன்றுக்கு 340 மில்லியன் ட்விட்களையும் மற்றும் 1.6 பில்லியன் தேடல்களையும் கொண்டு நல்ல வளர்ச்சியினை ட்விட்டர் அடைந்தது.
இதனை பயன்படுத்தி உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் 140 எழுத்துக்களை கொண்ட பதிவினை பதிவு செய்யும் வசதி உள்ளது.
இந்த செயலில் மூலம் நமக்கு தெரிவிக்க இருக்கும் கருத்தினை மிகவும் தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படியும் மற்றும் மிக வேகமாகவும் செய்தியினை தெரிவிக்கலாம்.
2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ட்விட்டர் ஒரு பொது நிறுவனமாக மாறியது. அதுபோலவே ஆரம்பத்தில் 140 எழுத்துக்களை மட்டுமே கொண்டு கருத்தினை பதிவு செய்யும் வசதி இருந்தது. ஆனால் 2017-ஆம் ஆண்டு முதல் 240 எழுத்துக்களை கொண்டு கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.
ட்விட்டரை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வீடியோ, ஸ்டிக்கர் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.
இத்தகைய ட்விட்டருக்கு எலோன் மாஸ்க் என்பவர் CEO– வாக பணியாற்றி வருகிறார்.
ட்விட்டரில் Account Create செய்வது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |