UPI Money Transfer To Wrong Account Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக இப்போது எல்லாம் அனைத்து விஷயங்களையும் நாம் ஆன்லைன் மூலமாக தான் செய்து வருகிறோம். அதாவது நாம் பார்க்க நினைக்கும் நபர் நம்மை விட்டு ரொம்ப தூரத்தில் இருந்தாலும் அவர்களை உடனடியாக பார்க்க வீடியோ கால் இருக்கிறது. அதன் மூலம் மிக எளிதாக ஒரு நொடியில் கால் செய்து அவர்களிடம் பேசிவிடுகிறோம். மேலும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் நமக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக எளிதாக வாங்கிக்கொள்கிறோம். இது மட்டும் இல்லாமல் ஒருவருக்கு திடீர் என்று பணம் அனுப்ப வேண்டும் என்றால் உடனே Gpay, Phonepe என்று நிறைய UPI வசதிகள் கொண்ட செயலிகள் இருக்கிறது. அதனை நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து மிக எளிதாக மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் Transfer செய்துவிடுகிறோம். அப்படி ஆன்லைனில் நாம் பணம் அனுப்பும் போது தவறுதலாக யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டோம் என்றால். அதனை நினைத்து கவலைபட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் பணத்தை மீண்டும் பெறுவதற்க்கான வழிகளும் இருக்கிறது. அதனை பற்றி தான் இன்றிய பதிவில் நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன வழி என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முதல் வழி:
நீங்கள் எந்த UPI APP-யில் தவறுதலாக பணம் அனுப்பினீர்களோ அந்த UPI APP-யில் தங்களுடைய புகாரை தெரிவிக்கவும். அதுவும் நீங்கள் இந்த புகாரை பணம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
LIC பாலிசிதாரர்களா நீங்கள்..? உங்களின் கேள்விக்கு Whatsapp மூலம் பதில் கிடைக்கும்..!
இரண்டாவது வழி:
UPI ஆப்பில் நீங்கள் புகார் செய்தபிறகும் உங்கள் பணம் மீண்டும் கிடைக்கவில்லை என்றால் NPCI Portal என்ற இணையதளத்திற்கு செல்லவும், பின் அதில் What We Do என்பதை கிளிக் செய்யுங்கள், பின் அதில் UPI என்பதில் Dispute Redressal Mechanism என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து உங்களது புகாரை தெரிவிக்கவும். இந்த புகாரையும் நீங்கள் பணம் தொலைந்த மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாவது வழி:
உங்கள் வங்கிக்கு செல்லவும் அங்கு Payment Service Provider என்று ஒருவர் இருப்பார், அவர்களிடம் உங்கள் கைப்பட பணம் தொலைந்த விஷயத்தை ஒரு கடிதம் வடிவில் எழுதி கொடுக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவற்றையும் நீங்கள் மூன்று நாட்களுக்கு செய்ய வேண்டும்.
நான்காவது வழி:
RBI கட்டுப்பாட்டிற்கு கீழ் Banking Ombudsman என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம். பணம் தொலைந்துவிட்டது என்று கடிதம் மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ உங்களது புகாரை தெரிவித்தால் உங்கள் பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |