ஸ்மார்ட் போனிற்கு LED டிஸ்பிளே சிறந்ததா.! LCD டிஸ்பிளே சிறந்ததா.!

Advertisement

Which is Better LCD or LED Mobile Display in Tamil

நாம் ஒரு போன் வாங்க போகிறோம் என்றால் முதலில் பார்ப்பது டிஸ்பிளேவை தான். டிஸ்பிளேதான் போனிற்கு ஒரு தனி அழகை கொடுக்கிறது. அப்படி டிஸ்பிளேவை பார்த்து போன் வாங்கும் போது நாம் கவனிக்காத ஒன்று என்னெவென்றால் அது என்ன வகையான டிஸ்பிளே என்பதைத்தான். நம்மில் பலபேருக்கு டிஸ்பிளேவின் வகை என்னெவென்று தெரியாது. அப்படி தெரிந்தாலும் அதில் எது சிறந்தது என்று தெரியாது. நாம் LED மற்றும் LCD டிஸ்பிளே என்று கேள்விபட்டிருப்போம், ஆனால் அதற்கான விளக்கம் தெரியாது. ஆகையால் இன்று பொதுநலம்.காம் பதிவில் LED டிஸ்பிளேவிற்கும் LCD டிஸ்பிளேவிற்கும் என்ன வித்தியாசம்.? இதில் எது சிறந்தது.? என்ற கேள்விகளுக்கான பதில்களை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What Is LED Display in Tamil:

 LED – Light Emitting Diode (லைட் எமிட்டிங் டையோடு) 

LED டிஸ்பிளே என்பது சிவப்பு, பச்சை மற்றும் நீல LED-கள் ஒரு நிலையான வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று வண்ணங்களும் சேர்ந்து ஒரு பிக்சலை உருவாக்குகிறது. டையோடுகளின் தீவிரத்தை சரிசெய்வதன் மூலம் பில்லியன் கணக்கான வண்ணங்களை உருவாக்க முடிகிறது. இந்த LED டிஸ்பிளேவை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்க்கும் போது வண்ண பிக்சல்களின் வரிசை ஒரு படமாக தெரிகிறது.

What Is LCD Display in Tamil:

 LCD – Liquid Crystal Display (லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே) 

எல்சிடி டிஸ்பிளே என்பது ஒரு வகையான பிளாட் பேனல் டிஸ்பிளே ஆகும். இது திரவ படிகங்களை அதன் முதன்மையான செயல்பாட்டில் பயன்படுத்துகிறது.  இவ்வகை டிஸ்பிளே ஸ்மார்ட் போன்கள், தொலைக்காட்சிகள்  மற்றும் கணினி திரைகள் போன்ற பலவற்றில் காணப்படுவதால் எல்சிடி டிஸ்பிளே நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்காக பெரிய மற்றும் மாறுபட்ட பயன்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

RAM -மிற்கும் ROM -மிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன..?

 

Difference Between LED And LCD Mobile Display in Tamil:

LED டிஸ்பிளே:

 which is better lcd or led mobile display in tamil

மொபைலின் டிஸ்பிளே டெக்னாலாஜியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது எல்இடி டிஸ்பிளேக்கள் தான். மார்க்கெட்டுகளில் இவ்வகை டிஸ்பிளேக்களை குறைவாகவே பயனப்படுத்துகின்றன. இதில் அதிகமாக பயன்படுத்தப்படும் டிஸ்பிளே வகை OLED (Organic Light Emiting Diode) தான். இந்த டிஸ்பிளே வகையின் கீழ் தான் நிறைய டிஸ்பிளேக்கள் உருவாக்கப்படுகின்றன.

LCD டிஸ்பிளேவுடன் ஒப்பிடும் போது இது செயல்படும் விதமே மாறுபட்டு இருக்கும். LCD- யை எடுத்து கொண்டால் ஒரு காட்சி தெரிய வேண்டும் என்றால் அதன் முழு பகுதியுமே இயங்க வேண்டியிருக்கும்.

ஆனால் LED டிஸ்பிளே அவ்வாறு இல்லை. அதன் ஒவ்வொரு பிக்சலுமே ஒரு LED  பகுதியை கொண்டிருப்பதால் எந்த பகுதி தெரிய வேண்டுமோ அந்த பகுதியில் உள்ள LED மட்டுமே ஒளிரும். எனவே படங்களை தெளிவாகவும், பிரகாசமாகவும், துல்லியமான வண்ணங்களிலும் காட்டுகிறது. LED டிஸ்பிளே போன்களை வெயிலில் எடுத்து சென்றால் கூட படங்களை தெளிவாக காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் இவை குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.

மொபைல் Screen-ஐ லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வர வைப்பது எப்படி?

 

LCD டிஸ்பிளே:

 difference between lcd and led display in tamil

சந்தைகளில் இருக்கும் 95 சதவீத மொபைல் போன்கள் LCD டிஸ்பிளே தொழில்நுட்பத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பலவகையான டிஸ்பிளேக்கள் உருவாக்கப்படுகின்றன.

அதில் முதலாவதாக இருப்பது TFT (Thin Film Transistor) என்பது ஆகும். இந்த வகை டிஸ்பிளே ஸ்மார்ட் போன் தொடங்கப்பட்ட காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவின் தயாரிப்பு செலவு குறைவு என்பதால் அதிகமான போன்களில் இந்த டிஸ்பிளேக்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இவை அதிகமான மின்சாரத்தை பயன்படுத்துவதாலும், பார்க்கும் கோணம் போனை சற்று திருப்பி பார்த்தால் கூட காட்சிகள் சரியாக தெரியாமல் இருப்பதாலும் இந்த டிஸ்பிளேக்களை பயன்படுத்துவதை தயாரிப்பாளர்கள் குறைத்துக் கொண்டார்கள்.

இப்பொழுது சந்தைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டிஸ்பிளேக்கள் IPS LCD (In-Place Switching) தான். இந்த வகை டிஸ்பிளேக்கள் TFT டிஸ்பிளேக்களை விட எல்லாவற்றிலும் சிறந்ததாக உள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்கள் இந்த Settings எல்லாம் On-ல இருந்துச்சுன்னா அதை Off பண்ணி வச்சிருங்க..!

 

LED vs LCD எது சிறந்தது.?

ஸ்மார்ட் போனிற்கு LED டிஸ்பிளே சிறந்ததா..? LCD டிஸ்பிளே சிறந்ததா..? என்றால் LED டிஸ்பிளே தான் சிறந்தது. அனைத்து விதத்திலும் LED டிஸ்பிளே சிறந்ததாக உள்ளது. ஆனால் இதன் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் விலை அதிகமாக உள்ள ஸ்மார்ட் போன்களில் தான் அதிகம் LED டிஸ்பிளே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் LED டிஸ்பிளேக்கள் உடைந்து விட்டால் அதை மாற்றுவதற்கு செலவாகும். ஆனால் LCD டிஸ்பிளே உடைந்தால் அதை மாற்றுவதற்கு குறைந்த அளவில் தான் செலவாகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement