குளவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்..! Kulavi Koodu Palan In Tamil..!

kulavi koodu palan

வீட்டில் குளவி கூடு கட்டலாமா..! Kulavi Koodu In Home..!

குளவி கூடு கட்டினால் என்ன பலன்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரின் வீட்டிலும் பார்த்தால் குளவி கூடு இருக்கும். அந்த குளவி கூடு கட்டுவதால்(kulavi koodu palan) நன்மையா? தீமையா? என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!

முன்னோர்களின் ஐதீகம்:

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் பார்த்தோமென்றால் குளவி கூடு இருப்பது இயல்பு தான். அந்த காலத்தில் எல்லாம் வீட்டில் குளவி கூடு கட்டி இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம்.

அதாவது வீட்டில் குளவி கூடு கட்டினால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு குழந்தை செல்வம் கிடைக்கப்பெறும் என்று அந்த காலத்தில் வாழ்ந்து வந்த முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

குளவி கூட்டினால் நன்மையா தீமையா:

குளவி கூடு கட்டுவதினால் நன்மைகளும் இருக்கிறது. அதே சமயம் குளவி கூடினால் பல இன்னல்களும் நிகழும். அதாவது குளவி கூட்டினால் வரும் இன்னல்கள் பார்த்தோமென்றால் வீட்டில் இருக்கும் கண்ணாடி சுவர்களில் பின் புறம் குளவி கூடு கட்டி இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அந்த கண்ணாடியை வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகள் தொட்டால் மிகவும் ஆபத்து ஏற்படும். மற்றபடி வீட்டில் குளவி கூடு கட்டுவதால் எந்த ஒரு தீங்கு விளைவுகளும் நேரிடாது. வீட்டில் நல்ல சுப விஷயத்தை மட்டுமே நிகழும்.

newகருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..!

குளவி வராமல் தடுக்க:

குளவி கூடு கட்டிய இடத்தில் அதாவது குளவி கூட்டை விட்டு வெளியேறிய பிறகு அந்த குளவி கூட்டை கையால் உடைத்து விட வேண்டும்.

கூட்டை உடைத்த பிறகு அந்த இடத்தில் கோமியம் தெளித்து குளவி கூடு கட்டிய இடத்தை சுத்தம் செய்யவேண்டும்.

குளவி கூட்டில் குழவியானது சிறிது நாட்களே தங்கி இருக்கும். அது போன பிறகு கோமியம் தெளித்து சுத்தம் செய்தால் வீட்டில் மறுபடியும் குளவி கூடு என்பது கட்டாது.

தீமைகள்:

தீமையான விஷயம் என்னவென்றால் வீட்டில் தேன் கூடுகள் கட்ட கூடாது. வீட்டில் குளவி கூடு கட்டினால் நன்மை தான். அதே வீட்டில் தேன் கூடு கட்டி இருந்தால் வீட்டில் ஏதோ ஆபத்து நேரிட கூடும்.

வீட்டில் தேன் கூடுகட்டும் ஆரம்ப நிலையிலேயே அதை வரவிடாமல் தடுப்பதற்கு புகை மூட்டம் ஏதேனும் போட்டு தடுத்துகொள்ளலாம்.

ஆரம்ப கட்டத்திலேயே இதை சரி செய்ய வேண்டும். தேன் கூடு பெரியதாக ஆகிவிட்டால் சரி செய்றது மிகவும் கடினம். தேன் கூடு கட்டினால் வீட்டில் ஆபத்து கண்டிப்பாக நேரும்.

newகாண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil