மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

Advertisement

Can We Eat Papaya During Periods in Tamil 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனை வயிறு வலி. இதனை தடுக்க மாத்திரைகளை பயன் படுத்துகின்றனர். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய பொருட்கள், சாப்பிட கூடாத பொருட்கள் என்று இருக்கின்றன. எனவே அவற்றை அறிந்து சாப்பிட வேண்டும். சில பொருட்கள் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வழியை குறைக்கிறது. அதேபோல் பப்பாளி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பழம். இதனை மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..? என்ற குழப்பம் இருக்கும். எனவே அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா..?

மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா

பொதுவாக பப்பாளி பழம் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். இதனை பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால் நன்கு பழுத்த பப்பாளியை சாப்பிட வேண்டும் என்றும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது என்றும் கூறுகிறார்கள்.

கர்ப்பிணிகளும் நன்கு பழுத்த பப்பாளியை மட்டுமே அளவோடு சாப்பிட வேண்டும்.

கர்ப்பகாலத்தில் பப்பாளி சாப்பிடலாமா?

பப்பாளியில் உள்ள சத்துக்கள்:

  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி 
  • மாங்கனீசு 
  • பொட்டாசியம் 
  • நார்ச்சத்து 
  • பீட்டா கரோட்டின்
  • புரோட்டீன்கள் 

மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள்:

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது:

பப்பாளி கருப்பையின் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் பப்பாளியில் உள்ள உள்ள கரோட்டின் வயிற்றில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்துகிறது:

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதால் மாதவிடாய் சுழற்சி மேம்படுகிறது. பப்பாளி பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை தசைகள் சுருங்கச் செய்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

பப்பாளி செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. இதனை பெண்கள் சாப்பிடும் போது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, செரிமான பிரச்சனை, பசியின்மை போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது.

மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள்..! சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான்..!

ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும்:

பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிடும் போது ஒழுங்கற்ற மாதாவிடாய் சரி ஆகி மாதம் மாதம் ஒழுங்காக வரும்.

 எனவே பப்பாளி பழத்தை பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிடலாம். ஆனால் ஒரு அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமான பப்பாளி பழத்தை சாப்பிட கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்

 

Advertisement