தொப்பையை குறைப்பது எப்படி.?
பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தொப்பை. 30 வயது கூட இன்னும் வரல அதுக்குள்ள தொப்பையா என்று ஆச்சிரியமாக கேட்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் எல்லா வயதினரையும் பாதிக்கிறது இந்த தொப்பை. தொப்பையை குறைப்பதற்கு பல வகையில் ட்ரை செய்கிறார்கள். ஆனால் ஏதும் Workout ஆக மாட்டிகிறதா..! கவலையை விடுங்கள் அதற்கான சிறந்த பயிற்சியை தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ தொப்பை குறையணுமா? இரவில் இதைச் சாப்பிடுங்க!
Walking Thoppai Benefits in Tamil:
காலை எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும்.
தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதோடு தொப்பையையும் ஈசியாக குறைக்கலாம். நீங்கள் சாதாரணமாக நடக்காமல் சற்று வேகமாக நடக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எப்பொழுதும் சாப்பிடும் உணவை மாற்றாமல் தினமும் 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இப்படி செய்வதனால் பெண்களின் தொப்பை குறையும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.நடைப்பயிற்சி செய்வதனால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இதய பிரச்சனைகள் வராமலும், உடல் எடை அதிகரிக்காமலும் வைத்து கொள்ள தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை சில நாட்களிலே காணலாம்.
நீங்கள் வெளியில் சென்றாலே சைக்கிள் அல்லது பைக்கில் போகாமல் நடந்து செல்ல பயிலுங்கள். நீங்களும் தினமும் நடைப்பயிற்சி செய்து தேவையில்லாத கொழுப்புகளை நீக்கி உடலை பிட்டாக வைத்து கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி நன்மைகள்:
நடைப்பயிற்சி வேகமாக நடந்தால் இரத்த அழுத்தத்தை சரியாக வைத்து கொள்ளும்.
நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடைப்பயிற்சி செய்தால் நீரிழிவு நோயை சரியான முறையில் வைத்துக்கொள்ளலாம்.
மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் பிரச்சனை வராமல் தடுக்க தினமும் வேகமாக நடைப்பயிற்சி செய்யுங்கள்.
முக்கியமாக நடைப்பயிற்சி செய்வதால் மூளையின் செயல்திறனை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்தால் கொழுப்புகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |