கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

கர்ப்ப கால கால் வீக்கத்தை குறைக்க Pregnancy Leg Swelling in Tamil

Pregnancy Leg Swelling in Tamil – கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவது என்பது ஒரு சகஜமான விஷயம் தான். இதனை கண்டு நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இந்த பிரச்சனை எதனால் வருகிறது உங்களுக்கு தெரியுமா? கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் எதனால் வருகிறது என்று பலருக்கு தெரிவதில்லை. ஆக இந்த பதிவில் நாம் கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏன் வருகிறது என்று காரணத்தை தெரிந்து கொள்வோம். இந்த காரணத்தை நாம் தெரிந்துகொண்டோம் என்றாலோ போதும் கால் வீக்கம் வருவதை தவிர்க்க முடியும். சரி வாங்க கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று தெரிந்துகொள்வோம்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?Pregnancy Leg Swelling in Tamil

கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதம் அவர்கள் உடலில் நிறைய விதமான மாற்றங்கள் நிகழும். இதய துடிப்பு, இரத்த ஓட்டம் இவற்றில் எல்லாம் அதிக மாற்றம் இருக்கும். மேலும் புரோஜெஸ்ட்டிரோன் என்கின்ற ஹார்மோன் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக சுரக்கும். இது மேல் வயிற்றை கொஞ்சம் உப்பிசமாகும், செரிமான ஆற்றலை குறைக்கும். இதன் காரணமாக முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், நறுமணங்களை பிடிக்காமல் போவது என்று நிறைய மாற்றங்கள் நிகழும். மேலும் முகம் வீக்கம், கை, கால் வீக்கம் இருக்கும் இவை அனைத்தும் அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.

அதுவே நடு மூன்று மாதம் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் நிறைய பேருக்கு கால் வீக்கம் பிரச்சனை வரும். இதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்றால்.

உடல் எடை அதிகரிப்பு, உடலில் நீர் அதிகளவு கோர்த்துக்கொள்ளுதல் (Water Reductions) மற்றும் அம்மாவின் இதைய துடிப்பு 30% முதல் 40% வரை துடிக்க வேண்டும். அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதிக இரத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆக இது போன்ற காரணங்களினால் கூட கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும்.

இந்த கால் வீக்கம் யாருக்கெல்லாம் அதிகமாக வருமென்றால் அதிமாக நின்றுகொண்டே இருப்பவர்களும், அதேபோல் அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்தாலும் அவர்களுக்கு கால் வீக்கம் ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்கும் நியூட்ரிசன் கிட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்..!

சாதாரணமான கால் வீக்கம் எது? கவனிக்க வேண்டிய கால் வீக்கம் எது? – Pregnancy Leg Swelling in Tamil

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் தூங்கி எழுதபிற்கு அவர்களுக்கு கால்களில் இருந்த வீக்கம் குறைந்திட்டது என்றால் அது சாதரண கால் வீக்கம் ஆகும்.

கவனிக்க வேண்டிய கால் வீக்கம் என்பது உங்கள் கால் வீக்கத்துடன் உங்கள் இதய துடிப்பின் நிலையையும் பரிசோதனை செய்ய வேண்டும், மேலு உங்கள் சிறுநீரகத்தில் ALBUMIN என்கின்ற புரோட்டினையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதய துடிப்பும், சிறுநீரகத்தில் இருக்கும் ALBUMIN என்கின்ற புரோட்டின் இவை இரண்டும் நார்மலாக இருந்தால் கவலைப்பட தேவை இல்லை. அதுவே நார்மலாக இல்லை என்றால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரங்கள் உங்களுக்கு BP மாத்திரையை அனுமதிக்கப்படுகிறது. அதனை நீங்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவற்றையும் தாண்டி உங்களுக்கு தலைவலியோ, வயிற்று எரிச்சலோ, கண்பார்வை மங்களானால் அல்லது கால் வீக்கத்துடன் அதிக வலி இருந்தால் கட்டாயமாக உங்கள் மகப்பேறு மருத்துவரரை அணுக வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் வராமல் இருக்க செய்யவேண்டியவை?

தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

உப்பு அதிக உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

காபி/டீ அதிகமாக அருந்துவரை தவிர்க்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் காபி அருந்துங்கள்.

அதிக நேரம் கணினியில் மறந்து பணிபுரிபவர்களாக இருந்தால், தங்கள் கால்களை தொங்கவிடாமால், கால்களுக்கு சிறியதாக ஸ்டூல் வைத்துக்கொண்டு கால்களை நீட்டி வைத்து வேலை பார்க்கவும். இவ்வாறு செய்தால் கால்களில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

சமையலறையில் அதிக நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் என்றால் ஒரு ஸ்டாலில் அமர்ந்துகொண்டு வேலை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் கால்களில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்கள் இப்படி தான் உட்கார வேண்டுமாம்.!

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்