Reason For White Discharge During Pregnancy in Tamil | Pregnancy White Discharge in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கர்ப்ப காலத்தில் வெள்ளை படுவது ஏன்.? (Why Do White Discharge Come During Pregnancy in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் பலவிதமான மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மனதில் பயம், பாசம், கவலை, குழப்பம், சோர்வு, பிரம்மிப்பு போன்ற பல உணர்வுகள் தோன்றும். அதுமட்டுமில்லாமல் கர்ப்பகாலத்தில் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் பெண்களுக்கு டென்சனிற்கு அளவே இருக்காது. எனவே கர்ப்பகாலத்தில் வெள்ளைப்படுவதற்கான காரணங்களை என்னென்ன என்று இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
Why Do White Discharge Come During Pregnancy in Tamil| கர்ப்ப காலத்தில் வெள்ளை படுவது ஏன்.?
கர்ப்பகாலத்தில் வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமான ஒன்று தான். அதனை பற்றி பயப்பட தேவையில்லை. ஆனால் வெள்ளைப்படுதலின் தன்மை பற்றி அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இரக்கத்தின் காரணமாக மாதவிடாய் சுழற்சி முழுவதுமாக வெள்ளைப்படுதல் குறைவாகவே இருக்கும்.
ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும். எனவே கருப்பை வாயில் ஏற்படும் மாற்றங்கள் வெள்ளைப்படுதலிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு மென்மையாவதால், அதிகப்படியான வெள்ளைப்படுதல் ஏற்பட்டு தொற்று நோயை தவிர்க்க உதவுகிறது. இது கருப்பையில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பானது தான். எனவே, கர்ப்பகாலத்தில் வெள்ளைப்படுவதால் அசௌகரியம் ஏற்பட்டாலும் அதனால் பயப்பட தேவையில்லை.குழந்தை வளர வளர குழந்தையின் தலை கருப்பை வாயில் அழுத்தப்படுவதாலும் வெள்ளைப்படுதல் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
சாதாரண நாட்களில் ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றே கர்ப்பகாலத்திலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு போன்ற நிறத்தில் வந்தாலோ அல்லது துர்நாற்றம் அடித்தாலோ மருத்துவரை நாடுவது நல்லது.
கர்ப்பகாலத்தின் இறுதியில் வெள்ளைப்படுதல் தடிமனாகவும் சளி போன்றும் வரும். ஒரு சிலருக்கு குறைவான சில இரத்த துளிகளுடனும் வரும். இதனால் பயப்பட தேவையில்லை. இது நிறை மாதத்தை குறிப்பதற்கான அறிகுறி ஆகும்.
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |