Why White Discharge Before Menstruation
பெண்களை பொறுத்தவரை வெள்ளை படுதல் என்பது இயல்பான ஒன்று. அதுவே இந்த வெள்ளைப்படுதல் ஆனது குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ இருந்தால் அது உடலுக்கு நல்லது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை போலவே சிலருக்கு வெள்ளைப்படுதல் ஆனது வெள்ளை நிறத்தில் இல்லாமல் வேறு நிறத்திலும் மற்றும் துறுநாற்றம் வீசக்கூடியதாகவும் இருக்கிறது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது நம்முடைய உடலில் உள்ள பிரச்சனையினை வெளிப்படுத்துகிறது என்று கூறலாம். இவ்வாறு இருக்கையில் சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பாக வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வுகள் இருக்கும். இத்தகைய நிகழ்விற்கான காரணம் என்ன மற்றும் எதனால் இப்படி வருகிறது போன்றவற்றை நமக்கு அவ்வளவாக தெரிவது இல்லை. எனவே இன்றைய பதிவில் பெண்களுக்கு மாதவிடாய் முன்பாக எதனால் வெள்ளைப்படுதல் வருகிறது என்று தெரிந்துக்கொள்ளப் போகிறோம்.
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது..
மாதவிடாய் முன் வெள்ளை படுதல்:
பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லி மீட்டர் அல்லது 1 ஸ்பூன் அளவு வெள்ளைப்படுதல் என்பது நிகழ்கிறது. இத்தகைய வெள்ளைப்படுதல் ஆனது நம்முடைய உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் திரவம் இரண்டும் சேர்ந்த ஒன்றாக தான் வெளியாகிறது.
பெண்களின் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆனது அதிகமாக சுரக்கும் போது தான் மாதவிடாய்க்கு முன்பும் மற்றும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் வெள்ளைப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற நேரத்தில் வெள்ளைப்படுதல் கட்டியாக வருகிறது.மேலும் மாதவிடாய்க்கு பின்பு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆனது தண்ணீர்போல இருக்கும். ஏனென்றால் மாதவிடாய் சுழற்சி பின்பு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் இதற்கான காரணமாக உள்ளது.
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்… |
வெள்ளை படுதல் வகைகள்:
- இளஞ்சிவப்பு வெள்ளைப்படுதல்
- சாம்பல் நிற வெள்ளைப்படுதல்
- பழுப்பு அல்லது சிவப்பு நிற வெள்ளைப்படுதல்
- மஞ்சள் அல்லது பச்சை நிற வெள்ளைப்படுதல்
- அடர்நிற வெள்ளைப்படுதல்
மேலும் இதுபோன்ற வெள்ளைப்படுதல் உங்களுக்கு இருந்தாலும் மற்றும் வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் உடனே நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம்…
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |