சங்க கால பெண் புலவர்கள் பெயர்கள் | Sangakala Pen Pulavargal in Peyargal in Tamil
சங்க காலத்தில் ஆணுக்கு நிகராக பெண் புலவர்களும் பலர் இருந்துள்ளார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த பெண் புலவர்கள் இலக்கிய ஆளுமை கொண்டவர்களாய் இருந்தனர். சங்க காலத்தை சேர்ந்த புலவர்களை சங்ககால புலவர்கள் என்று கூறுகிறார்கள். சங்க காலமானது மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், மூன்றாம் சங்கம் ஆகும். முதற்சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழை வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். நாம் இந்த பதிவில் சங்க காலத்தில் வாழ்ந்த பெண் புலவர்களின் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..