மனித உடல் உறுப்பு பெயர்கள் தமிழ் | Human Body Parts in Tamil

Advertisement

மனித உடல் பாகங்கள் | Human Body Parts Name in Tamil

மனித உடல் என்பது மனிதனின் முழுமையான கட்டமைப்பாகும். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு செயல்பாடுகளை நடத்தி வருகிறது. உடலில் ஒரு பாகம் சீராக இயங்கவில்லை என்றால் முழு உடலுமே சில சிக்கலைகளை கொடுக்க ஆரம்பித்துவிடும். மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் பலருக்கும் தெரிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஆங்கில உறுப்பு வார்த்தைக்கான தமிழ் வார்த்தை தெரியாமல் இருக்கலாம். அதனால் இன்றையப் பதிவில் மனித உடல் உறுப்புகளின் பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கத்துடன் கற்கலாம் வாங்க..

மனித உடல் பொது அறிவு வினா விடை?

Human Body Parts in Tamil and English:

மனித உடல் உறுப்புகள் ஆங்கிலத்தில் மனித உடல் உறுப்பு பெயர்கள் தமிழ்
Head தலை
Eyes கண்கள்
Ears காதுகள்
Cheek கன்னம்
Nose மூக்கு
Mouth வாய்
Neck கழுத்து
Nipple முலைக்காம்பு
Shoulder தோள்/புயம்
Chest மார்பு/நெஞ்சு
Navel  தொப்புள் 

 

Rib விலா (எலும்பு)
Breast மார்பு (பெண்)
Arm கை
Elbow முழங்கை
Abdomen வயிறு
Umblicus/Bellybutton தொப்புள்/ நாபி
Groins கவட்டி
Wrist மணிக்கட்டு
Palm உள்ளங்கை
Fingers விரல்கள்
Blood  இரத்தம் 

 

Vegina/Vulva யோனி/ புணர்புழை
Penis ஆண்குறி
Testicle/scrotum விரை
Thigh தொடை
Knee முழங்கால்
Calf கெண்டைக்கால்
Leg கால்
Ankle கணுக்கால்
Foot பாதம்
Toes கால் விரல்கள்
Armpit  அக்குள்

 

Wrist மணிக்கட்டு
Thumb கட்டைவிரல்
Little Finger சுண்டுவிரல்
Ring Finger மோதிரவிரல்
Middle Finger நடுவிரல்
Index Finger சுட்டுவிரல்
Lowerleg கீழ்கால்
Toenails கால்(விரல்) நகங்கள்
heel குதிகால்
Fist கைமுட்டி (மூடிய கை)

 

மனித மூளை பற்றிய தகவல்கள்

 

Nail நகம்
Knuckle விரல் மூட்டு
Muscle தசை
Skin தோல்
Hair முடி
Forehead நெற்றி
Eyebrow கண் புருவம்
Eyelash கண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி
Eyelid கண் இரப்பை/கண் மடல்/கண் இமை
Eyeball கண்மணி
Reflex  மறிவினை

 

Nostril மூக்குத்துவாரம்/ நாசித்துவாரம்
Face முகம்
Chin முகவாய்க் கட்டை
Adam’s apple குரல்வளை முடிச்சு (ஆண்)
Mustache மீசை
Beard தாடி
Lip உதடு
Uvula உள்நாக்கு
Throat தொண்டை
Molars கடைவாய் பல்

 

Premolars முன்கடைவாய் பல்
Canine கோரை/நொறுக்குப் பல்
incisors வெட்டுப் பல்
Gum பல் ஈறு
Tongue நாக்கு
Belly வயிறு (குழிவானப் பகுதி)
Back முதுகு
Backbone முதுகெலும்பு
Buttock குண்டி/ புட்டம்
Anus/asshole குதம்

 

Skull கபாலம்/ மண்டையோடு
Muscular தசை
Nerve நரம்பு
Endocrine சுரப்பி
Hip இடுப்பு
Lung நுரையீரல்
Heart இதயம்
Kidney சிறுநீரகம்
Brain மூளை
Stomach  வயிறு
பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை தெறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement