பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்

ponniyin Selvan Characters Name in Tamil

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் | ponniyin Selvan Characters Name in Tamil

பொன்னின் செல்வன் ஒரு சிறப்பு வாய்ந்த கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். இந்த பொன்னின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. இந்த புனிதம் 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. அப்பொழுது மக்கள் ஆதரவானது இந்த புனிதத்திற்கு அதிகமாக கிடைத்தது. இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. குறிப்பாக இந்த புனிதத்தில் கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பொன்னின் செல்வன் புனிதத்தை பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த பொன்னின் செல்வன் புனிதத்தில் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300-க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. சரி இந்த தொகுப்பில் பொன்னனின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்:

 1. வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
 2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
 3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
 4. குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்)
 5. பெரிய பழுவேட்டரையர்
 6. நந்தினி
 7. சின்ன பழுவேட்டரையர்
 8. ஆதித்த கரிகாலர்
 9. சுந்தர சோழர்
 10. செம்பியன் மாதேவி
 11. கடம்பூர் சம்புவரையர்
 12. சேந்தன் அமுதன்
 13. பூங்குழலி
 14. குடந்தை சோதிடர்
 15. வானதி
 16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
 17. கந்தமாறன் (சம்புவரையர் மகன்)
 18. கொடும்பாளூர் வேளார்
 19. மணிமேகலை (சம்புவரையர் மகள்)
 20. அநிருத்த பிரம்மராயர்
 21. மதுராந்தக சோழர்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்