பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Bifilac Tablet Uses in Tamil

Advertisement

பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Bifilac Tablet Uses and Side Effects in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் (Bifilac Tablet Uses in Tamil) என்ன என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஏதாவது உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தால்  உடனே நாம் மருத்துவரை தான் அணுகுகிறோம். அப்படி அணுகும் போது மருத்துவர்கள் அந்த பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கின்றன. நாமும் அந்த பிரச்சனை சரியாக மாத்திரையை எடுத்துக்கொள்கிறோம். அப்படி நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் நமது உடலில் சில சமயம் சில பக்கவிளைவுகளை ஏற்படும். ஆக நாம் உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்காகவும் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பிஃபிலாக் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் (Bifilac Tablet Uses and Side Effects) பற்றி அறியலாம் வாங்க.

குறிப்பு:  மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

பயன்கள் – Bifilac Tablet Uses in Tamil:

Bifilac Tablet

இந்த பிஃபிலாக் மாத்திரை பொதுவாக இரைப்பை குடல் கோளாறுகள், பாக்டீரியா தொற்றுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

  1. இரைப்பைக் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
  2. குடல் அசௌகரியத்திற்கு நிவாரணம் அளிக்கிறது
  3. குடல் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
  4. பாக்டீரியா தொற்றுகளுக்கு  நிவாரணம் அளிக்கிறது.
  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

Bifilac hp Tablet Uses in Tamil:

பொதுவாக நோயின் தீவிர தன்மையை குறைப்பதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒரு சில மருந்துகள் வயிற்றுப்போக்கினை ஏற்ப்டுத்தலாம். அப்போது Bifilac hp மாத்திரையானது பரிந்துரைக்கப்படுகிறது. செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

இந்த மாத்திரையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்:

பிஃபிலாக் மாத்திரை மருந்தை உணவுடனோ அல்லது இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். வயிற்றில் கோளாறு ஏற்பட்டால் மருந்தை உணவுடன் உட்கொள்ள வேண்டும். மேலும் இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த Bifilac Tablet-ஐ யாரோ ஒருவர் பயன்படுத்தியதை கேட்டு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம். மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

பக்கவிளைவுகள் – Bifilac Tablet Side Effects in Tamil:

பிஃபிலாக் மாத்திரை உட்கொள்வது சில சமயங்களில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் அவை என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

  1. வாந்தி
  2. வயிற்றுப்போக்கு
  3. சொறி
  4. குமட்டல்
  5. வயிற்று வலி
  6. வாயு
  7. தோல் வெடிப்பு
  8. மயக்கம்
  9. தலைவலி

இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். ஆக இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தக் கூடாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள்

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து
Advertisement