Gentamicin Cream Uses
இந்த காலத்தில் அனைவருமே உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை சென்று பார்க்காமல் மருந்தகங்களில் கிடைக்கும் மாத்திரைகளை தானாக வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று. நமக்கு எந்த உடல்நல பிரச்சனை வந்தாலும் நாம் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். அவர் எழுதி தரும் மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும்.
அதுபோல நீங்கள் மருந்தகங்களில் தானாக மாத்திரை வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய தகவல்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொரு மருந்து பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அதுபோல இன்று ஜெண்டாமைசின் கிரீம் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
சைபால் மருந்து பயன்கள் |
Gentamicin Cream Uses in Tamil:
ஜெண்டாமைசின் (Gentamicin) மருந்து ஒரு வகையான பாக்டீரியா தொற்றுக்களின் சிகிச்சைக்கு உதவுகிறது. இது அமினோகிளைகோசைட் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் வகையைச் சேர்ந்தது ஆகும்.
இந்த மருந்து பாக்டீரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது அல்லது அதற்கு சிகிச்சை அளிக்கிறது.
- சிறிய தோல் நோய்த்தொற்றுகள்
- அரிக்கும் தோல் அழற்சி
- தடிப்புத் தோல் அழற்சி
- சிறிய தீக்காயங்கள்
- வெட்டுகள்
- காயங்கள்
போன்ற சிறிய நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இந்த கிரீம் Antibiotics பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த கிரீம் வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகளுக்கு வேலை செய்யாது.
க்ளோட்ரிமாசோல் கிரீம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? |
ஜெண்டாமைசின் கிரீம் எப்படி பயன்படுத்துவது..?
இந்த மருந்து தோலில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரீம் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் கைகளை கழுவி கொள்ள வேண்டும். பின் காயம் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.
பின் உங்கள் மருத்துவர் கூறியபடி இந்த மருந்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பொதுவாக இந்த மருந்தை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை அப்ளை செய்ய வேண்டும். மேலும் மருத்துவர் கூறியபடி பயன்படுத்துவது நல்லது.
இந்த கிரீம் தடவிய பின்பு பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மருந்து தடவிய பிறகு உங்கள் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். அதுபோல இந்த மருந்தை அப்ளை செய்யும் போது போட்டிருந்த துணிகளையும் சுத்தமாக துவைக்க வேண்டும்.
மேலும் இந்த மருந்து பயன்படுத்தும் போது தோலில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
முப்பிரோசின் களிம்பு பயன்கள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |