ஜஸ்டின் 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்..!

Advertisement

Justin 25mg Tablet in Tamil 

பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படும். அப்படி உடல்நல குறைபாடு ஏற்படும் பொழுது நமது உடல்நல குறைபாட்டை போக்கி நமது உடலை பலப்படுத்த நமக்கு உதவிபுரிவது மருந்துகள் தான். அவற்றை நாம் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நீங்களாகவே மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளகூடாது. ஏனென்றால் மருத்துவருக்கு மட்டுமே எந்த மருந்தை எந்த அளவிற்கு அளித்தால் எந்தவித பக்கவிளைவும் வராது என்று தெரியும். ஆனால் உங்களுக்கு மருந்துகள் பற்றிய முழுவிவரங்களும் தெரியாது. அதனால்  நீங்களாகவே மருந்துகளை வாங்கி உட்க்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டாலும் அந்த மருந்து பற்றிய முழுத்தகவல்களையும் அறிந்துகொண்ட பிறகே உட்கொள்ளவேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் Justin 25மி.கி மாத்திரை பற்றிய முழுத்தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்=> சுப்ரடின் மாத்திரை பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா

Justin 25mg Tablet Uses in Tamil:

Justin 25mg uses in tamil

ஜஸ்டின் 25 மி.கி மாத்திரை ஒரு ஸ்டீராய்டு அல்லாத ஒரு வலி நிவாரணி ஆகும். இது தசை வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம், கடுமையான மாதவிடாய் வலி, கணுக்கால் இழுத்தல் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற வலிகளுக்கு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது.

இது உடலில் புரோஸ்டாக்ளான்டின் என்ற சேர்மத்தினை உற்பத்தி செய்யக்கூடிய ஜினேஸ் சுழற்சியை நிறுத்துவதன் மூலம் வேலை செய்கிறது. இந்த சேர்மம் உடலில் அழற்சி, வீக்கம், காய்ச்சல் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்=> சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை பற்றிய தகவல்

மேலும் இந்த மருந்து பாக்டீரியா டி. என். ஏ உற்பத்தியையும் தடுக்கிறது. இந்த மருந்து மாத்திரை மற்றும் வாய்வழி கரைசல் படிவத்திலும் கிடைக்கிறது.

இந்த மருந்தினை பயன்படுத்துவதன் மூலம் 11 முதல் 12 மணிநேரம் வரை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். எனவே, வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக்கொள்ளலாம்.

Justin 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்:

இந்த மருந்தினை நீங்கள் முழுமையாக குணமடையும் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மட்டுமே இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒருவேளை நீங்கள் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் ரத்தக்கசிவு கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையின் படியே இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Justin 25mg Tablet Side Effects in Tamil:

வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், தலைசுற்றல், தலைவலி, வயிற்று வலி அல்லது வயிறு பிடிப்பு, அடர் நிற மலம், எடை இழப்பு மற்றும் சோர்வு ஆகியவை இந்த மருந்து எடுத்துக்கொள்ளும் காரணத்தால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும்.

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் படியுங்கள்=> Nodosis மாத்திரை பற்றிய தகவல்

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து
Advertisement