கால் ஆணி குணமாக பாட்டி வைத்தியம் | Kaal Aani Treatment in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கால் ஆணி பிரச்சனை இருப்பவர்களுக்கு இனி கால் ஆணி பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும் ஒரு அற்புதமான குறிப்பை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். கால் ஆணியினால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகையால், கால் அணி உடையவர்கள் கால் ஆணி குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
கால் ஆணி என்பது நம் கால்களில் இருக்கும் தோள்கள் மற்றும் தடிமனான திட்டுகள் என்று சொல்லப்படுகிறது. இவை தோளின் உள்பகுதியில் நிலையான அழுத்தத்தின் காரணமாக கால்களில் உருவாகிறது. மேலும் இவற்றை சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
கால் ஆணி இயற்கை வைத்தியம் |
ஆணிகால் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்:
நீங்கள் அணியும் கால் அணிகளை சரியான முறையில் உங்கள் அளவிற்கு தகுந்தது போல அணிய வேண்டும். சரியான அளவில் கால் அணிகளை அணிவதினால் கால்கள் அழுத்தம் இல்லாமல் இருக்கும் இதனால் கால் ஆணி வருவதை தடுக்கலாம்.
தினமும் கால்களை தூய்மைப்படுத்துவது அவசியம். கால்களை தூய்மை படுத்தியதும் ஈரப்பதம் உள்ள கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். நீங்கள் வெளியில் ஏதேனும் வேலைகள் செய்யும் பொழுது கால்களில் உரைகளை மாற்றிக்கொள்வது அவசியம்.
கால் ஆணி குணமாக:
காலில் வர கூடிய ஆணியை எடுப்பதற்கும், அதனுடைய வழியை குறைப்பதற்கும், இனிமேல் ஆணிக்கால் வரமால் இருப்பதற்கும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி எளிய முறையில் சரி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- மருதாணி இலைகள்- ஒரு கைப்பிடி அளவு
- கற்பூரம்- 2
- மஞ்சத்தூள்- சிறிதளவு
- தண்ணீர்
- கிளிசரின்
செய்முறை :
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் வெறும் மருதாணி இலைகளை மட்டும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவேண்டும். அரைத்தபிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். கலக்கிய பிறகு சூடத்தை நுணுக்கி அதில் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு கிளிசரின் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.
இப்பொழுது மருந்து தயார். இதனை நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு காலில் இந்த மருந்தை பயன்படுத்தினால் வழிகள் குறைந்து கால் ஆணி வெளியாகிவிடும். கால் ஆணி வெளியாகுவது மட்டுமில்லாமல் பாதங்களையும் அழகாக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |