லிப்ராக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் | Librax Tablet Uses in Tamil

librax tablet uses in tamil

Librax Tablet Uses in Tamil

பொதுவாக நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் திடீரென ஏதாவது நமது உடலுக்கு பிரச்சனைகள் வந்து விடுகிறது. அப்படி இருக்கும் போது சாதாரணமான காய்ச்சல் வந்தால் கூட நாம் உடனே மாத்திரையை தான் உட்கொள்கின்றோம். இது மாதிரி நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரை நமக்கு நன்மையினை அளித்தாலும் கூட அதில் சில பக்க விளைவுகளும் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் Librax மாத்திரையின் பயன்கள் மற்றும் அதனுடைய பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

Librax Tablet Uses in Tamil:

 librax tablet side effects in tamil

நமது உடலில் வயிற்றில் அல்சர் ஏற்பட சுரக்கும் சுரப்பினை கட்டுப்படுத்தவும் மற்றும் நமது உடலில் தேவையில்லாமல் சுரக்கும் சுரப்பியின் அளவினை குறைக்கவும் லிப்ராக்ஸ் மாத்திரை பயன்படுகிறது.

இந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் யாரும் எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரிடம் உடலில் ஏற்படும் பிரச்சனையை தெளிவாக கூறி சரியான அளவில் லிப்ராக்ஸ் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மனதில் கவலை, வயிறு பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் இதனை சரி செய்வதற்காக லிப்ராக்ஸ் மாத்திரை பயன்படுகிறது. அதேபோல ஆல்கஹால் உட்கொள்வதை நிறுத்தவும் இந்த மாத்திரை மருத்துவரின் சரியான அளவின் படி நோயாளிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

லிப்ராக்ஸ் மாத்திரையின் பக்க விளைவுகள்:

  1. வயிறு வீக்கம்
  2. தலை சுற்றல்
  3. வாந்தி
  4. கண் பார்வை மங்கல்
  5. உமிழ்நீர் சுரக்காமல் இருத்தல்
  6. குமட்டல்
  7. மலச்சிக்கல்
  8. மனதில் குழப்பம்
  9.  நரம்பு தளர்ச்சி

லிப்ராக்ஸ் மாத்திரையினை உட்கொள்வதனால் மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஏதேனும் ஒரு பக்க விளைவுகள் வந்தால் கூட அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கைகள்:

  • கர்ப்பிணி பெண்கள்
  • குழந்தை பெற்றடுத்த தாய்மார்கள்
  • ஆல்கஹால் அருந்துபவர்கள்
  • 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மற்றும் மற்ற நபர்களும் உங்களுக்கு மருத்துவர் லிப்ராக்ஸ் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் படி பரிந்துரை செய்தால் நீங்கள் முன்னரே எடுத்துக்கொள்ளும் மாத்திரை பற்றியும் மற்றும் உணவு எடுத்துக்கொள்ளும் முறை பற்றியும் தெளிவாக கூற வேண்டியது மிகவும் அவசியம்.

அதேபோல மருத்துவர் கூறிய முறைப்படி மட்டுமே லிப்ராக்ஸ் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் மாத்திரையின் அளவை கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.

இதையும் படியுங்கள்⇒ Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து