மயோஸ்பாஸ் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Myospaz Tablet Uses in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில்  அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி பார்க்க போகிறோம். இன்று நாம் மயோஸ் பாஸ் மாத்திரை என்றால் என்ன அதனை உட்கொண்டால் என்ன பயன் கிடைக்கும். அதனை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளையும் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

குறிப்பு 👉👉 எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவர்களின் பரிந்துரை செய்யாமல் எடுத்துக்கொள்ள கூடாது. 

மயோஸ்பாஸ் மாத்திரை செயல்பாடுகள்:

இந்த மாத்திரை பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியாக உள்ளது. இது பல வலிகளுக்கு வலியை போக்கக்கூடிய மருந்தாக உள்ளது. இந்த மாத்திரை குளோர்சோக்சசோன் மற்றும் பாராசிட்டமால் போன்ற மருந்துகளின் வகையை சார்ந்தது.

இந்த மாத்திரை மனிதனுக்கு உடல் வலி முதல் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது வரை உதவுகிறது. மேலும் மூட்டு வலி, தசை வலி, காய்ச்சலின் போது ஏற்படும் வலிகள், தசை வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி அல்லது கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாக உதவுகிறது.

அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் வலியை போக்கவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு வலியிலிருந்து மீளவும் இந்த மாத்திரையை பரிந்துரை செயலாம்.

Myospaz Tablet Benefits in Tamil:

இந்த மாத்திரையை காய்ச்சல், தலைவலி, தசை வலி, மாதவிடாய் வயிற்றுவலி, கீல்வாதம், தசை பிடிப்பு போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த மாத்திரை உதவுகிறது.

மயோஸ்பாஸ் மாத்திரை எதற்கு பயன்படுத்த கூடாது:

உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக இந்த மாத்திரையை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் வயிற்று புண் மற்றும்  கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடக்கூடாது.

Myospaz Tablet Side Effects in Tamil:

இது மாத்திரை குமட்டல், வாந்தி, தோல் ஒவ்வாமை, இரைப்பை, வாய்புண், இரத்தசோகை, உடல் களைப்பு போன்றவற்றை ஏற்படும்.  ‘

மயோஸ்பாஸ் மாத்திரையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்: 

நீங்கள் எந்த ஒரு மருந்தையும் அளவுகள் இல்லாமல் சாப்பிடப் போவது இல்லை. அதேபோல் நாம் சாப்பிடும் நேரங்களில் மட்டுமே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வலியானது நின்று விட்டது என்று இந்த மாத்திரையை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளலாம். அதன் பின் வலியை ஏற்படுத்தும் அப்போது உங்களுக்கு கொடுத்த அளவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அளவு அதிகமாக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது.

அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்:

அதிகமாக உட்கொள்ளுவதன் மூலம் பசியின்மை, குமட்டல், வாந்தி, தோல் அல்லது கண்களில் மஞ்சள் நிறம், அடர் நிற சிறுநீர் அல்லது வயிற்று வலி போன்றவைகள் உடலில் ஏற்பட்டால் அது நீங்கள் அளவுகள் இல்லாமல் எடுத்துக்கொண்ட மாத்திரையினால் வரும். ஆகவே அப்படி நேர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அறிவுரையை கேட்டுக்கொள்ளவும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள் 

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து
Advertisement