டெல்மிசர்தன் மாத்திரை நன்மை மற்றும் பக்க விளைவுகள் | Telmisartan Tablet Uses in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் டெல்மிசர்தன் மாத்திரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது மற்றும் என்னென்ன பக்க விளைவுகள் உள்ளன என்று தெரிந்துக்கொள்ளலாம். நமது உடலில் ஏதேனும் தோல் சம்பந்தமான நோய் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போனாலோ நாம் முதலில் எடுத்துக்கொள்வது அதற்கான ஆயிண்ட்மெண்ட் அல்லது தகுந்த மாத்திரையைத்தான். உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து மாத்திரையையும் எடுத்துக்கொள்வது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் இந்த பதிவில் தெல்மிசார்தன் மாத்திரை எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும், சாப்பிட்டால் என்ன நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் உள்ளன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் |
டெல்மிசர்டன் 40 மிகி பயன்பாடுகள் – Telmisartan 40 MG Uses in Tamil:
டெல்மிசர்தன் மாத்திரையானது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த மாத்திரை மிகவும் பயன்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் பக்கவாதம், இரத்த நாளங்களை விரிவுப்படுத்தவும், உடலில் அதிகமாக இருக்கும் உப்பு மற்றும் தண்ணீரை சிறுநீரகத்திலிருந்து வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தமும் குறைந்து காணப்படுகிறது.
இரத்த குழாய்களின் தசையை தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது இந்த தெல்மிசார்தன் மாத்திரை.
ஆன்ஜியோடென்ஸின் II ஹார்மோனின் அளவு குறைவாக உள்ள போது ஒரு ஏற்பியின் செயல்பாட்டைத் தடுக்கிறது.
டெல்மிசர்டன் 40 மிகி பக்க விளைவுகள்:
இந்த மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளான குறைந்த இரத்த அழுத்தம், தசைப்பிடிப்புக்கள், இருமல், ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி, முகம் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படுதல், வாமிட், வீக்கம், அரிப்பு, உடலில் ஏதேனும் வலி, மார்பு எரிச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி, உடல் சோர்வு, கைகளின் வீக்கம், கணுக்கால் அல்லது பாதம் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு இவற்றில் ஏதேனும் நீங்கள் அறிகுறியாக கண்டால் மருத்துவரை உடனடியாக அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
போல்விட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இந்த மாத்திரையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்:
- ஈரல் பாதிப்பு அடைந்தவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவுற இருக்கும் பெண்கள் கட்டாயம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- நிணநீர் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
- கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய், நீரிழிவு மற்றும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இந்த டெல்மிசர்தன் மாத்திரையை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாத்திரை கிடைக்கும் அளவு:
- 10 Tablet, 14 Tablet, 100 Tablet, 30 Tablet
- 40MG, 20MG
முக்கிய சிறப்பம்சம்:
- இந்த மருந்தின் விளைவுகள் 24 மணிநேரம் வரை நீடிக்கும்.
- இந்த மருந்தின் உச்ச விளைவை 1 முதல் 2 மணி நேரத்திற்குள் உணர முடியும்.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரை அணுகிவிட்டு பயன்படுத்துவது நல்லது.
எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் பின் விளைவுகளை சந்திக்கக்கூடியவர்கள் நீங்கள் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |