வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
வைட்டமின் பி பயன்கள்: ஊட்டச்சத்து குறைபாடு இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை உணவுகள் மூலம் கூட சுலபமாக சரி செய்து விடலாம். இருப்பினும் ஒரு சிலர் விட்டமின் குறைபாடுகளுக்காக மாத்திரை எடுத்து கொள்வது வழக்கம். அப்படி எடுத்து கொள்ளும் மருந்து வகைகளில் ஒன்று தான் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ். இந்த பதிவில் Vitamin b Complex மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை பயன்கள் – Vitamin B – Complex Tablet Uses in Tamil:
- வைட்டமின் பி மாத்திரை: எட்டு விட்டமின்களின் தொகுப்பு வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் எனப்படும். வைட்டமின் பி1 தயமின், வைட்டமின் பி 2 ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 3 நியாசின், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6 பைரிடாக்ஸின், வைட்டமின் பி 7 பயோட்டின், வைட்டமின் பி 9 ஃபோலேட், வைட்டமின் பி 12 கோபாலமின் போன்ற எட்டு விட்டமின்களின் தொகுப்பே வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் எனப்படும்.
- இந்த மாத்திரை பொதுவாக வைட்டமின் பி குறைபாட்டுக்காக பயன்படுகிறது. காய்ச்சல், கல்லீரல், பித்தப்பை, பித்தநீர் பாதை மற்றும் கணையம் போன்ற (காஸ்ட்ரோடெஸ்டினல்) கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
- அறுவை சிகிச்சைக்கு பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு, குடல் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலில் வைட்டமின் பி சத்து அதிகரிப்பதற்கு உதவுகிறது.
- தீக்காயங்கள், காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதற்கும், இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
பக்க விளைவுகள் – Vitamin B – Complex Tablet Side Effects in Tamil:
- வயிற்று போக்கு, உடல் வீக்கம், தலைவலி, தலைசுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- Polycythemia Vera (பாலிசித்தெமியா வேரா என்பது ஸ்டெம் செல்களில் ஏற்படும் புற்று நோயாகும்).
- தோல் அரிப்பு, கொப்பளங்கள், புற வாஸ்குலர் நோய் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- மேற் குறிப்பிட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் |
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை யார் சாப்பிடலாம்?
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
- சிறுநீரக நோய், கல்லீரல், இதய நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் எந்த விதமான உபாதைகளும் ஏற்படுவதில்லை இருப்பினும், மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் உபயோகப்படுத்துவது நல்லது.
- மது அருந்திவிட்டு வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை எடுத்து கொள்ள கூடாது.
- இந்த மாத்திரையை நீங்கள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடுவது நல்லது.
- மாத்திரை இல்லாமல் உடலில் வைட்டமின் பி சத்து அதிகரிக்க நினைப்பவர்கள் முழு தானியங்கள், காய்கறிகள், மாமிச உணவுகள், மீன், பால், முட்டை, கீரைகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவை வைட்டமின் சத்து அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
புளுக்கோனசோல் மாத்திரை பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |