வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Wysolone 5 Mg Tablet Uses in Tamil | Wysolone 5 Mg மாத்திரை பயன்கள் 

இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் இல்லை என்றால் நாம் இல்லை என்பது போல ஆகிவிட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு நமது உடல் நலம் ஆரோக்கியத்தில் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் அதில் ஒரு பங்கு கூட ஆரோக்கியமாக இருக்கிறோமா என்று கேட்டால் தெரியவில்லை என்பது தான் பாதி நபரின் பதிலாக இருக்கிறது. அத்தகைய உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் மாத்திரையை பற்றி ஓரளவாவது தெரிந்து இருக்கும் வேண்டும். அதனால் இன்றைய மருந்து பதிவில் வைசோலோன் 5 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். 

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பயன்கள்:

wysolone 5 mg tablet uses in tamil

வைசோலோன் 5 மி.கி மாத்திரையானது தோல் அலர்ஜி, முடக்கு வாதம், மூட்டு வலி, சரும வீக்கம், மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் இரத்த கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த மாத்திரை கல்லீரல் பிரச்சனை, சர்க்கரை நோய் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, பதற்றம் மற்றும் இருதய பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் மருத்துவரின் ஆலோசனைப்படி உடலுக்கு ஏற்ற சரியான அளவில் பயன்படுத்த படுகிறது.

இந்த மாத்திரையில் நிறைய வகையான மி.கி இருப்பதால் நாம் கவனமாக மருத்துவர் கூறிய அளவில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் அளவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறிவிடும்.

அதுபோல வைசோலோன் 5 மி.கி மாத்திரை ஒரு ஸ்ட்ராய்டு மாத்திரை என்பதால் இதனை மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிந்துரைப்பது இல்லை.  

வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பக்க விளைவுகள்:

  1. உடல் எடை அதிகரிப்பு
  2. மனநோய்
  3. தூக்கமின்மை
  4. வயிறு வீக்கம்
  5. செரிமான கோளாறு
  6. வயிறு வலி
  7. வயிறு பிரட்டல்
  8. கண் புரை
  9. இரத்த அழுத்தம்
  10. வயிற்று போக்கு
  11. நியாபக மறதி
  12. அதிகமான பசி

இதையும் படியுங்கள் ⇒  ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்

முன்னெச்சரிக்கை:

மருத்துவர் உங்களுக்கு வைசோலோன் 5 மி.கி மாத்திரையை பரிந்துரைக்கிறார் என்றார் தற்போது நீங்கள் சாப்பிடும் மாத்திரை மற்றும் உணவு முறையினை பற்றி மருத்துவரிடம் தெளிவாக கூற வேண்டும்.

அப்படி உங்களுக்கு இந்த மாத்திரை சாப்பிடுவதில் ஏதேனும் பக்க விளைவுகள் முன்னதாக ஏற்பட்டு இருந்தால் அதையும் மருத்துவரிடம் மறக்காமல் கூற வேண்டும்.

அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement