மருதாணி போட மருதாணி தேவையில்லை.! சர்க்கரை மட்டும் போதும் கை சிவந்துவிடும்

Advertisement

மருதாணி வைப்பது எப்படி.?

சுப நிகழ்ச்சிகள் என்றாலே கையில் மருதாணி வைப்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். நம் முன்னோர்கள் எல்லாம் மருதாணி வைத்தார்கள். இப்பொழுது கடையில் விற்கும் கோனை வாங்கி போடுகிறார்கள். இன்னும் சில நபர்கள் இது இரண்டுமே போட மாட்டார்கள். காரணம் மருதாணி குளிர்ச்சியானது என்று போட மாட்டார்கள். இனிமேல் நீங்களும் சுப நிகழ்ச்சிகளுக்கு கை சிவக்க சிவக்க செல்லலாம். அதற்கு முக்கியமாக மருதாணி தேவையில்லை.! வேற எப்படி போட என்று யோசித்து கொண்டே பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மருதாணி செய்ய தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை –2 தேக்கரண்டி 
  • டீத்தூள் – 2 தேக்கரண்டி 

மருதாணி செய்முறை:

மருதாணி வைப்பது எப்படி

மருதாணி செய்ய பயன்படுத்தும் கிண்ணம் மறுமுறை வேற எதற்கும் பயன்படுத்த முடியாது. அதனால் வீட்டில் உள்ள தேவையில்லாத டப்பாவிட தகர டப்பா வாக இருந்தால் சிறந்ததாக இருக்கும்.

மருதாணி வைப்பது எப்படி

அடுத்து சர்க்கரை, டீத்தூள் இரண்டையும் கலந்து எடுத்து வைத்திருக்கும் டப்பாவில் உள்பகுதியில் போட  வேண்டும். பொருட்களை சேர்த்து பிறகு டப்பாவில் உள்பகுதியில் சின்ன கிண்ணமாக வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கையில் மருதாணி போட்டால் சிவக்கவில்லையா இனி கவலை வேண்டாம் இதை செய்திடுங்கள்

பிறகு அடுப்பில் இந்த டப்பாவை வைத்து அதன் மேல் சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கொள்ள்வும். ஒரு 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

மருதாணி வைப்பது எப்படி

டப்பா ஆறியதும்  வைத்த கிண்ணத்தை எடுத்து பார்த்தால் தண்ணீராக இருக்கும் அந்த தண்ணீரில் சிறிதளவு குங்குமம் சேர்த்து கலந்து விடவும்.

இந்த மருதாணியை கையில் நீங்கள் எந்த மாதிரியான டிசைனும் போடலாம். இந்த மருதாணியை போட்டு உடனே கழுவினாலும் அப்படி சிவந்திருக்கும். இந்த மருதாணியை உடனே செய்து கையில் போட்டு பார்த்துவிட்டு பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்கள் நண்பர்களே.!

இதையும் படியுங்கள் ⇒ கொட்டாங்குச்சியில் மருதாணி செய்வது எப்படி?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement