Mootu Vali Neenga
பொதுவாக மூட்டு வலி வயதானவர்களுக்கும் மாடிப்படியில் ஏறி இறங்குபவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும். மூட்டு வலி சரியாகுவதற்காக பல மருந்து மாத்திரைகள், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று பல முறைகளில் ட்ரை செய்திருப்பீர்கள். இந்த முறைகளில் பயன்படுத்திய போது வலிகள் குறைந்திருக்கும். பின் நாளடைவில் மூட்டு வலி ஏற்படும். வலிக்காக மருந்து மாத்திரை எடுப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் இந்த பதிவில் கூறியுள்ள யோகாவை செய்து பாருங்கள்..!
Yoga For Knee Pain in Tamil:
பயிற்சி:1
முதலில் ஒரு நாற்காலியில் கால் பாதங்களை ஒன்றாக வைத்து உட்காரவும். பின் இரண்டு முட்டிகளுக்கு இடையில் ஒரு தலைகாணியை வைத்து கொள்ளவும். மூச்சை இழுத்து கொண்டு முட்டியை பயன்படுத்தி தலைகாணியை அழுத்தவும்.
உங்களால் எந்த அளவிற்கு தலைகாணியை அழுத்த முடியுமோ அந்த அளவுக்கு அழுத்த வேண்டும். பின் மூச்சை வெளியிட்டவாறே வலது காலை தூக்கவும். பின் இது போல இடது காலையும் மாற்றி செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!
பயிற்சி:2
அடுத்த பயிற்சி நாற்காலியின் அடியில் தலைகாணியை வைத்து கொள்ளவும். அதன் மேல் நீங்கள் உட்கார வேண்டும். மூச்சை இழுத்து கொண்டு வலது காலை மேல்நோக்கி தூக்கவும். தூக்கிய காலின் முட்டியானது தலைகாணியை அழுத்த வேண்டும். பின் மூச்சை வெளிவட்டவாறே காலை கீழே விட வேண்டும். இது போல் இடது காலை மாற்றி செய்யவும்.
பயிற்சி:3
அடுத்து நாற்காலி அல்லது நீங்கள் பிடித்து கொள்வதற்கு ஏற்றது போல் எடுத்து கொள்ளவும். நாற்காலியை பிடித்து கொண்டு கொஞ்சம் தூரம் நின்று முதுகு பகுதியை வளைக்கவும். கால்களை நேராக வைத்து கொள்ளவும்.
மருந்து மாத்திரை எல்லாம் தூக்கி போட்டு விட்டு இந்த மூன்று பயிற்சிகளை செய்யுங்கள். மூட்டு வலி பிரச்சனை சரியாகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ 7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!
இது போன்ற யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் | யோகா |