குறட்டையை குறைக்க மாத்திரை எதுவும் வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்..!

குறட்டை குணமாக யோகா

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை நமது உடலில் தலை வலி, முதுகு வலி, கை மற்றும் கால் வலி, கழுத்து வலி, சிறுநீரக பிரச்சனை என நாம் சொல்ல முடியாத அளவிற்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒருவகையான பிரச்சனை என்றால் சிலருக்கு குறட்டை வருவது இருப்பதிலேயே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிலர் குறட்டையை குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் எல்லா காரணத்திற்கும் நாம் எடுத்த உடனே மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. அதனால் நீண்ட நாளாக இருந்த குறட்டை குறைய ஒரே ஒரு யோகா மட்டும் செய்தால் போதும். அது என்ன யோகா மற்றும் அதனை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Yoga to Cure Snoring:

குறட்டையை சரி செய்வதற்கு நாம் இரண்டு வகையான முத்திரையை செய்ய வேண்டும்.

பங்கஜ முத்திரை:

பங்கஜ முத்திரை

முதலில் தரையில் முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி 5 நிமிடம் பொறுமையாக மூச்சினை இழுத்து விடுங்கள்.

அதன் பிறகு உங்களுடைய இரண்டு கைகளையும் தாமரை மொட்டுகள் போல மூடி இரண்டு கைகளில் உள்ள விரல்கள் இணையும் படி 2 நிமிடம் வைத்து கொள்ளுங்கள்.

2 நிமிடம் கழித்த பிறகு கைகளை சுண்டு விரல் மட்டும் ஒன்றாக இருக்கும் படி வைத்து கொண்டு மற்ற விரல்களை பூ போல விரித்து கொள்ளுங்கள். இது போல 5 நிமிடத்திற்குள் 3 முறை செய்து கொள்ளுங்கள். இதுவே பங்கஜ முத்திரை ஆகும்.

 இந்த பங்கஜ முத்திரையினை தினமும் காலையில் செய்வதன் மூலம் நமது சுவாச மண்டலத்தை நன்றாக செயல்பட செய்து குறட்டையினை குறைத்து விடும். அதுமட்டும் இல்லாமல் இந்த முத்திரை மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.  

சக்தி முத்திரை:

சக்தி முத்திரை

இந்த முத்திரையை செய்வதற்கு முன்பு முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு 5 முறை மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.

அடுத்து உங்களுக்கு இரண்டு கைகளில் உள்ள மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் இரண்டினையும் ஒன்றாக நேராக இருக்கும் படி வைத்து கொண்டு மற்ற விரலைகளை மடித்து உள்ளே வைத்து கொண்டு சாதாரணமாக அமர்ந்து 2 முதல் 5 நிமிடம் வரை இப்படி செய்து கொள்ளுங்கள். இதுவே சக்தி முத்திரை ஆகும்.

இத்தகைய சக்தி முத்திரையை காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்பு செய்ய வேண்டும். இந்த முத்திரையும் குறட்டையை குறைய வைக்கும்.

முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க

மகா சிரசு முத்திரை:

மகா சிரசு முத்திரை

மகா சிரசு முத்திரையை செய்வதற்கும் முதலில் முதுகு எலும்பை நேராக வைத்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டு மூச்சை சாதாரணமாக வைத்து கொள்ளுங்கள்.

 அதன் பிறகு இரண்டு கைகளில் உள்ள கட்டை விரல், ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல் மூன்றையும் ஒன்றாக இணைத்து வைத்து கொண்டு சுண்டு விரலை நீட்டியும் மற்றும் மோதிர விரலை மடித்தும் 2 நிமிடம் இப்படியே வைத்து கொண்டு அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து விடுங்கள்.   

இந்த மகா சிரசு முத்திரையை தினமும் மூன்று வேளையும் செய்து வர வேண்டும்.  மகா சிரசு முத்திரை நம்முடைய மூச்சை சரி செய்து நுரையீரலை நன்றாக இயங்க செய்யும். 

இந்த மூன்று முத்திரையை செய்து முடித்த பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்து மீண்டும் இந்த மூன்று முத்திரையும் 2 நிமிடம் வரிசையாக செய்ய வேண்டும். இதை செய்தால் போதும் குறட்டை குறைந்து ஆரோக்கியமாக நீங்கள் வாழலாம்.

        இதையும் படியுங்கள் 👇 👇 👇  யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com