இந்த பிஸ்னஸை யார் செய்தாலும் தினமும் 1,000 ரூபாய்க்கு மேல் வரையும் சம்பாதிக்கலாம்

Advertisement

தினசரி வருமானம் தரும் தொழில்

வணக்கம் நண்பரகளே இன்றைய வியாபார பதிவில் ஒரு அருமையான தொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த தொழில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலாக இருக்கும். அதோடு மட்டும்மின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு பக்கத்தில் பெட்டி கடைகள் வைத்து நடத்துபவர்கள் இந்த தொழிலை செய்தால் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த தொழில் தொடங்குவதற்கு 1,000 ரூபாய் முதலீடு போட்டால் போதும், தினமும் அதிகமான லாபத்தை பெறலாம், மேலும் அவை என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பெண்கள் அதிகமாக வாங்கும் பொருள் இந்த பிஸ்னஸை செய்தால் மாதம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

 

Ice Gola Making Business in Tamil:

இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால், ஐஸ் கோலா தயாரித்து , அதனை எப்படி விற்பனை செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  பொதுவாக ஐஸ் கிரீம் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும், அதிலும் ஐஸ் கோலா என்றால் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஐஸ் கோலாவை தரமான பொருட்களை கொண்டு தயாரித்து மக்கள் போக்குவரத்து இருக்கும் இடங்களில் விற்பனை செய்தால், அதிகமான வருமானத்தை பெறலாம்.

தேவைப்படும் இடவசதி:

இந்த ஐஸ் கோலாவை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் சின்னதாக இடம்  இருந்தாலே போதுமானது.  அதாவது 10 × 10 இடம் இருந்தால் போதும் நீங்களும் இந்த தொழிலை செய்யலாம்.  மேலும் இந்த தொழிலை தொடங்கி  அதிகமான லாபம் வந்ததும், நீங்கள்  தனியாக கூட ஒரு கடை வைத்து பெரிய அளவில்  செய்யலாம். பொதுவாகவே நாம் எந்த ஒரு தொழிலையும் தொடங்கும் பொழுது, முதலில் நஷ்டங்கள் தான் ஏற்படும். ஒரு தொழில் தொடங்கி ஒருமாதம் ஆன பிறகு தான் அதில் அதிகமான லாபத்தை எதிர் பார்க்கலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த ஐஸ் கோலாவை தயாரிப்பதற்கு உங்களுக்கு ஒரு மெஷின் தேவைப்படுகிறது. இந்த  மெஷின் அதனுடைய மாடல்களை பொறுத்து விலையும் மாறுபடுகிறது. இந்த Ice Gola Making மெஷினை ஆன்லைன் மூலம் கூட வாங்கிக்கொள்ளலாம். இதனுடைய ஆரம்ப விலை 250 ரூபாய் மட்டும்தான்.  இதை  நீங்கள் பெரிய அளவில் இந்த பிஸ்னஸை செய்யும் பொழுது 4,000 ரூபாய் க்கு ஆன்லைனில் இந்த மெஷினை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஐஸ் கோலாவை தயாரிப்பதற்கு உங்களுக்கு ஐஸ் கட்டிகள், Ice Gola Syrup, ஐஸ் குச்சிகள் இவை மட்டும் இருந்தாலே போதும் மிகவும் சுலபமாக செய்யலாம். இந்த பொருட்களை நீங்கள் நேரடியாகவும் வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

விற்பனை செய்யும் முறை:

இதனை விற்பனை செய்யும் பொழுது 10 ரூபாயில் இருந்து  30 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறார்கள். நீங்களும் இந்த ஐஸ் கோலாவை தயாரித்து அதிகமாக போக்குவரத்து இருக்கும் இடம், சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே 1,000 ரூபாய்க்கு மேல் வரையும் சம்பாதிக்கலாம்.

வீட்டில் இருந்தபடியே பார்ட்டைம் பிஸ்னஸ் தினமும் 5, 000 ரூபாய் வரையும் வருமானம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement