இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..!

Advertisement

இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..!

Appalam making business:- புதிதாக தொழில் துவங்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்றை பதிவில் குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தபடி ஆண், பெண் இருவரும் செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில் பற்றிய விவரங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதாவது அப்பளம் தயாரிப்பு தொழில் பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். அப்பளம் தயாரிப்பு தொழில் அதிக வருமானம் பெறமுடியுமா? என்று பலரும் யோசிப்பார்கள்.

இருப்பினும் இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி ஆகும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அப்பளம் தயாரிப்பு தொழில் தான். எனவே இந்த தொழில் தயக்கம் இல்லாமல் அனைவரும் துவங்கலாம்.

இந்த தொழில் பொறுத்தவரை சுவை மற்றும் கைப்பக்குவம் இவை இரண்டும் மக்களிடம் அதிகம் எதிர்பாக்கப்படுகிறது. எனவே பெண்கள் இந்த தொழில் வீட்டில் இருந்து குறைந்த முதலீட்டில் துவங்கினால் தினமும் இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

சரி இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கான இயந்திரம் எங்கு கிடைக்கும், இந்த தொழில் துவங்க என்னென்ன சான்றிதழ் பெற வேண்டும் போன்ற விவரங்களை இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

Appalam Making Business..!

appalam making business

முதலீடு:-

இந்த அப்பளம் தயாரிப்பு தொழில் துவங்க குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதலீடாக தேவைப்படும்.

மூலப்பொருட்கள்:-

அப்பளம் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மூலப்பொருட்கள் என்றால் உளுந்து மாவு, சீரகம், பேக்கிங் சோடா, உப்பு, ஆயில், அரிசி மாவு மற்றும் தயாரித்த அப்பளங்களை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் இவை அனைத்தும் தேவைப்படும்.

தேவைப்படும் இயந்திரம்:-

 Papad Making Machine

இந்த இயந்திரத்தின் பெயர் Papad Making Machine, விலை 15,000/- இந்த அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் 1 மணி நேரத்தில் 800 முதல் 1000 அப்பளம் தயாரிக்கலாம்.

இந்த இயந்திரத்தில் அப்பளம் உருண்டைகளை உருட்டி கவரில் வைத்து இயந்திரத்தின் உள்ளே விட வேண்டும்.

பிறகு இயந்திரம் ரோல் செய்யப்பட்டு அப்பளமாக வெளியே வரும். இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது.

தாங்கள் இந்த இயந்திரத்தை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து வாங்கவேண்டும் என்று விருப்பினால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யுங்கள்..

உற்பத்தி விவரம்:-

இந்த ரோலிங் இயந்திரத்தில் ஒரு மணி நேரத்தில் 800 முதல் 1000 அப்பளம் தயார் செய்யலாம். ஒரு அப்பளத்திற்கு 0.80 பைசா என்று வைத்து கொண்டால் 800 X 0.80 = 640 ரூபாய் நமக்கு வருமானமாக கிடைக்கும்.

அதே ஒரு நாளிற்கு 8 மணி நேரம் அப்பளம் தயாரிக்கும் பொழுது 640 X 8 = 5120 ரூபாய் நமக்கு வருமானமாக கிடைக்கும்.

அதுவே ஒரு மாதத்திற்கு 30 நாள் நாம் அப்பளம் உற்பத்தி செய்கின்றோம் என்றால் 30 X 5120 = 1,53,600 ரூபாய் நமக்கு வருமானமாக கிடைக்கும்.

இவற்றில் உற்பத்தில் மற்றும் இதர செலவுக்கு போக கணிசமாக நமக்கு 1 லட்சம் வருமானம் கிடைக்கும்.

சிறு தொழில் பட்டியல் 2021

சந்தை வாய்ப்பு:-

தாங்கள் தயார் செய்த அப்பளங்களை தரமாக பேக்கிங் செய்து அதாவது தங்ளுடைய பிராண்ட் நேம், எக்ஸ்பீரி டேட் போன்றவற்றை உள்ளீட்டு சந்தைகளில் விற்பனை செய்யலாம்.

அதாவது பெரிய சூப்பர் மார்க்கெட், உங்கள் ஊரில் மற்றும் தெருக்களில் உள்ள சிறிய பெட்டி கடைகளில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.

தாங்கள்  தயார் செய்யும் அப்பளம் சுவையாகவும், தரமாகவும் இருந்தால் நிச்சயம் இந்த தொழிலில் தாங்கள் வெற்றி பெற முடியும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement