லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும்..!

Advertisement

Home Business Ideas

இன்றைய காலத்தை பொறுத்தவரை பெரும்பாலான நபர்கள் சொந்தமாக சுயதொழில் செய்து வருகின்றனர். அத்தகைய தொழில் அனைத்தும் நல்ல லாபம் மற்றும் வருமானம் தரக்கூடியதாக இருந்தால் போதும் என்று தான் எல்லோரும் யோசித்து செய்து வருகின்றனர். உங்களுக்கும் இதுமாதிரி சுயதொழில் செய்ய வேண்டும் என்றால் எல்லோரும் செய்த தொழிலை நீங்களும் செய்தால் அதில் பெரிதாக முதலீடு எதுவும் கிடைக்க வாய்ப்பு இருக்காது. அதனால் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தொழிலை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் அந்த தொழிலை எப்படி தொடங்குவது என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Big Profit Business Ideas:

 how to make flaxseed powder in tamil

இப்போது அதிக அளவு டிமாண்ட் உள்ள பொருட்களில் ஒன்றான ஆளிவிதையினை வைத்து பவுடர் தயாரித்து எப்படி தொழில் தொடங்குவது என்று நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஆளிவிதையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஆளிவிதை பெண்களின் வயிற்று வலி, சருமம், கேன்சர் மற்றும் உடல் எடை ஆகிய அனைத்திற்கும் நல்ல பலனை அளிக்கிறது.

முதலீடு | மூலப்பொருள்: 

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 20,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

  1. ஆளிவிதை
  2. Powder Making Machine
  3. Zip Lock Pouch

மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று பொருட்களும் கட்டாயமாக உங்களுக்கு தேவைப்படும். அதுபோல நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக FSSAI லைசென்ஸ் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

Flaxseed பவுடர் தயாரிக்கும் தொழிலினை செய்வதற்கு உங்களுக்கு ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் கட்டாயமாக தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ சொல்லி கொடுத்தால் போதும்.. அளவில்லாமல் சம்பாதிக்கலாம்

How to Make Flaxseed Powder in Tamil:

home business ideas in tamil

முதலில் நீங்கள் தொழில் செய்வதற்கு வாங்கி வைத்துள்ள ஆளிவிதையினை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அதனை மிஷினில் போட்டு பவுடர் போல தயாரித்து கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு மிஷினை பற்றி தெரியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் மிஷின் வாங்கும் இடத்திலயே இந்த பவுடரை தயாரிப்பதற்கான அனைத்து விதமான பயிற்சிகளும் உங்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படும் .

ஆகையால் அதனை தெளிவாக கற்றுக்கொண்டு பவுடரை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பேக்கிங் செய்தல்:

நீங்கள் தயார்செய்து வைத்துள்ள ஆளிவிதை பவுடரை 500 கிராம் மற்றும் 1 கிலோ என Zip Lock Pouch-ல் நிரப்பி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை: 

இந்த ஆளிவிதை பவுடரை நீங்கள் பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், Shapping மால், மெடிக்கல் சாப், பியூட்டி பார்லர் மற்றும் நாட்டுமருந்து கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

500 கிராம் ஆளிவிதை பவுடரின் விலை 225 ரூபாய் என்றும் 1 கிலோ ஆளிவிதை பவுடரின் விலை 450 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆகாயல் ஒரு  நாளைக்கு நீங்கள் 500 கிராம் பாக்கெட்டில் 15-ம் மற்றும் 1 கிலோ பாக்கெட்டில் 15-ம் தோராயமாக விற்பனை செய்தால் 10,125 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இந்த தொழிலுக்கான லாபத்தை ஒரு முறை யோசித்து பார்த்தால் போதும் இப்போதே இந்த தொழிலை செய்வீங்க..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement