1 ரூபாய் கூட முதலீடு இல்லாமல் செய்யும் சூப்பரான தொழில்

Advertisement

முதலீடு இல்லாத தொழில்

வணக்கம் நண்பர்களே..! குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகளும், கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நபர்கள் முதலீடு குறைவாக உள்ள வேலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நபர்கள் 1 ரூபாய் கூட முதலீடு போடாமல் செய்யும் தொழில்கள் ஏதும் இருக்கா என்று யோசிப்பார்கள்.! அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க என்ன தொழில் என்று தெரிந்துகொள்வோம்.

இந்த தொழிலையும் படியுங்கள் ⇒ தினமும் காலை 10 to 12 வேலை செய்தால் 1,500 ரூபாய் சம்பாதிக்கும் அருமையான தொழில்

முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்யலாம்:

முதலீடு இல்லாமல் தொழில் செய்ய முடியுமா.? என்று யோசிக்காதீர்கள். முதலீடு இல்லாமல் தொழில் செய்வதற்கு உங்களுக்கு தேவையானது 1 Android போன் நீங்கள் இந்த தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக தனியாக ஒரு sim இது மட்டும் போதுங்க.

போன் வாங்கனும் என்று அவசியம் இருக்காது. ஏனென்றால் எல்லாரிடமும் போன் உள்ளது. ஒரு sim மட்டும் தான் வாங்க வேண்டியிருக்கும். போனில் என்ன வேலை இருக்க போகிறது என்று யோசிக்கிறீர்களா.! ரொம்ப ஈஸியான வேலை தாங்க. வாங்க என்ன தொழில் என்று பார்ப்போம்.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

இந்த தொழிலுக்கு தெரிந்துகொள்ள வேண்டியது Mechanical number, Electrician number, போர் போடுபவர் number, Grinder , மிக்ஸி சரி செய்பவர் number போன்றவை சரி செய்பவர்கள் number வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் number ஏன் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி வரும். வீட்டில் மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும். அதை சரி செய்வதற்கு அவர்கள் இடத்திற்கு சென்று தான் அழைத்து வருவோம். உங்களின் போன் நம்பரை கொடுத்து போன் செய்தால் போதும் சரி செய்ய அவர்களே வந்து விடுவார்கள் என்றால் யாரு தான் செய்யாமல் இருப்பார்கள்.

விளம்பரம் செய்யும் முறை:

நீங்கள் Mechanical, Grinder இன்னும் வீட்டில் என்னென்ன பொருட்கள் எல்லாம் Repair ஆகும் என்று தெரிந்துகொண்டு சரி செய்வதற்கு call பண்ணினால் போதும் வீட்டுக்கு வருவார்கள் என்று social media மற்றும் தெரிந்தவர்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும்.

வருமானம் எப்படி.? 

இப்படி செய்யும் போது வருமானம் எப்படி என்று நினைப்பீர்கள். நீங்கள் போன் பண்ணி அவர்கள் வீட்டில் சென்று பழுது பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு amount சரி செய்வதற்கு எவ்வளவோ கொடுப்பார்கள். சரி செய்தவர் உங்களுக்கான கமிஷன் கொடுப்பார். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒன்றுமே செய்யமால் சூப்பரா சம்பாதிக்கலாம். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement